Header Ads



றிசாத்தையும், குடும்பத்தினரையும் மையமாக கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறி – மங்கள சாடல்

(நா.தனுஜா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத்தேர்தல் பிரசாரத்தை மேம்படுத்திக் கொடி நட்டுவதற்காக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயன்படுத்தி அதன் ஊடாக  வெற்றியைப் பெற்றுக்கொண்ட சூத்திரத்தை மீளப்புதுப்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.   

இதன் ஓரங்கமாகவே மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதுடன், ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை மையமாகக் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் பரப்பி வருகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார்.

ஆளுந்தரப்பினரின் பொதுத்தேர்தல் பிரசார உத்தி என்று சாடியிருக்கும் மங்கள சமரவீர, இதுகுறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை  செய்திருக்கிறார். அப்பதிவில் அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இலங்கையின் காணப்படும் ஒரு சில மிதவாத அரசியலாளர்களில் மங்கள சமரவீர அவரகளும் ஒருவராவார். இவரைப் போன்று இன்னும் இருபத்தைந்து அதிகாரமிக்க அரசியலாளர்கள் நாட்டில் இருந்திருந்தால் என்றோ நாடு சிங்காரச்சீமையாக மாறி இருக்கும். இருக்கும் அரசியலாளர்கள் மக்களை சீரழித்து அவரகளைச் சூடாக்கி தங்களுக்கு உரம் போட்டு தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை சிறப்பாக வடிவமைத்து நடத்திக்கொண்டு செல்கின்றனர். எமது ஊடகங்களும் இந்த விடயங்களில் எத்தகைய ஆர்வமும் அற்றவரகளாக காணப்படுவது மிகவும் வெட்கக்கேடானதாகும். இனவாதத்தைப் பரப்புவதனால் எந்த பயனும் இல்லை என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்த எந்த அரசியலாளர்களும் தயாராக இல்லை. எல்லாரும் அப்படித்தான் இருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் சௌஜன்னியத்தையும் இனஒற்றுமையையும் சமூக அபிவிருத்தியையும் எவ்வாறு ஏற்படுத்த முடியும். ஆயினும் இன்னமும் ஒரு சில சிங்கள தமிழ் பாராளுமன்றவாதிகள் உண்மையானவரகளாகவே இருப்பது சற்று பயத்தைத் தணிக்கின்றது. இனரீதியாக அவரகளும் சிங்கள மக்களால் துவேச அடிப்படையில் ஒதுக்கப்பட்டார்களெனில் இலங்கையின் ஜனநாயகப் பண்புகள் வேறு வடிவத்தை எடுத்தாலும் அது மிகையாகாது. மங்கள சமரவீர அவரகள் தேர்தலில் இருந்து தாமாகவே விலகினாலும் மாத்தறை மக்கள் இம்முறையும் அவர்களை தமது உறுப்பினராகத் அதிகப்படியான வாக்குகளினால் தேர்வு செய்வர் அதனை அவரகள் ஏற்றுக்கொள்வது அல்லது விடுவது என்பது அவர்களது விருப்பம்.

    ReplyDelete
  2. மங்கள, வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஓர் அபூதாலிப்.

    ReplyDelete
  3. Yes agree we need the people like MS otherwise sri lanka will become a hell soon,

    ReplyDelete

Powered by Blogger.