Header Ads



பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு கண்டி முஸ்லிம் தமிழ் சமூகத்தினரின் பங்களிப்பு மகத்தானது - வேட்பாளர் பாரிஸ்

(ஐ.ஏ. காதிர் கான்)

இம்முறை பொதுத் தேர்தலில் எமது கண்டி மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர்> ஜனாதிபதி மற்றும் பிரதமரது நல்லிணக்கத் திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். இதேபோன்று> தமிழ் சகோதர சமூகத்தினர்களும் கூட இந்த நல்லெண்ணச் செயற்பாடுகளுக்கு தமது ஒத்துழைப்புக்களை நல்;குவதற்கு முன்வந்திருப்பதையும் பாராட்டுகின்றேன். இந்நிலையில்> எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்; பலத்தைப் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளதாக> கண்டி மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான மற்றுமொரு புதிய அலுவலகம்> கம்பளை கஹட்டபிட்டியவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்; கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில்> கண்டி மாவட்ட  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுராத ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீல.சு.கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரான ஏ.எல்.எம். பாரிஸ் அவர்களின் இந்த வெற்றிப் பயணத்தில்> கம்பளை நகரபிதா எச்.எல்.எம். புர்கான் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

 வேட்பாளர்; பாரிஸ் இங்கு மேலும் உரையாற்றுகையில்>

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகம் விட்ட தவறை> எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் விட்டுவிடாது நிதானமாகச் சிந்தித்து செயற்படுவது காலத்தின் அவசியத் தேவையாகும். கண்டி மாவட்ட முஸ்லிம்கள் இம்முறை பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு கைகோர்த்து முழுமையான பங்களிப்பை ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இந்தத் தேர்தல் எமக்கு இறுதியாகக் கிடைக்கவுள்ள அருமையான சந்தர்பமாகும். இதனைத் தக்கவைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவர் மீதும் உள்ள பாரிய கடப்பாடாகும்;.

நாம் எமக்குள் வாக்குகளுக்காகவும் தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் பிரிந்து நிற்பதால் எந்த வித சாத்தியமான விளைவுகளும் அடையப்போவது இல்லை. இம்முறையும் முஸ்லிம் கட்சிகளும்> ஏனைய சில பிரதான கட்சிகளும் பிரிந்து போட்டியிடுவதை> சாதகமான விடையமாகவே நாம் உற்றுநோக்க வேண்டும். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் பகுத்தறிவே தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கு கால கட்டாயமாகியுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறுபட்ட கட்சிகளும்> அதனுடைய வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இக்கட்சிகளிடையே பலம்வாய்ந்த கட்சியாக பொதுஜன பெரமுன உள்ளது. இந்தத் தேர்தலில் இம்முறை இளைஞர்கள் பலரும் களம் இறங்கியுள்ளமை> பொதுஜன பெரமுன கட்சியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.