June 12, 2020

முஸ்லிம்களுக்கு எதிரான, பிரச்சாரங்களை தீவிரப்படுத்த திட்டம் - கொழும்பு டெலிகிராவ்

- Rajeevan Arasaratnam -

கடந்த நவம்பரில் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த பல பிளவுபடுத்தும் கருப்பொருட்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் புதுப்பிக்கவுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானவுடன் முஸ்லீம்களை இலக்குவைக்கும் வெறுப்புணர்வு பிரச்சாரமும், மேற்குலகின் சதிமுயற்சிகள் குறித்த குற்றச்சாட்டுகளும் வெளியாகலாம்.

முஸ்லீம் மருத்துவர் சாபி மீதான கருத்தடை குற்றச்சாட்டுகள், ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் பதிவுகள், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், சுவிஸ் தூதரக விவகாரம் உட்பட பல சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட அமுலாக்கல் அதிகரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என நம்பகதன்மை மிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எதிர்கட்சியினர் மீது குற்றச்சாட்ஈடுகளை சுமத்தி அவர்களை அவமானப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள், எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைப்பது தவிர்க்கப்படும் அவர் தற்போது பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணியின் வேட்பாளராக காணப்படுவதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளன.

எனினும் தனது சொந்த ஊரில் சிறிசேன குறைந்தளவு விருப்புவாக்குகளை பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன, இதற்கான திரைமறைவு வேலையை முன்னெடுப்பதற்கான உத்தரவுகள் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களிற்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுஜனபெரமுனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும இடையிலான முறுகல் நிலை அதிகளவிற்கு வெளிப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுஜனபெரமுனவின் வேட்பாளர்களிற்கு அதிகளவு நிதியும் பிரச்சார வாய்ப்பும் வழங்கப்படலாம் இதனால் பல மாவட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தோற்கும் நிலை உருவாகலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர்களிற்கும், ஜனாதிபதிக்கு நெருக்கமான வியத்மக வேட்பாளர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடுகளும் போட்டிகளும் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Pohottuwa To Revive Anti-Muslim Campaign And Probes Against Opponents As Election Campaigns Kick Off

The Sri Lanka Podujana Peramuna will resurrect several sharply divisive themes that helped President Gotabaya Rajpaksa cruise to victory in the November presidential election as the parliamentary election campaign kicks off including a hate campaign targeting Muslims and neo-colonial conspiracies against the West Colombo Telegraph learns.

Reliable sources told Colombo Telegraph that law enforcement has been instructed to resume hyper activity on multiple investigations including fake sterilization conspiracy involving the Muslim surgeon Dr Shafi, the Ranjan Ramanayake phone recordings, the detention of attorney Hejaaz Hisbullah, the Swiss embassy abduction saga, former Minister Champika Ranawaka’s motor accident and cases against strong politicians in the opposition camp with a view to the August 5th general election. Former CID Director SSP Shani Abeysekera will also be a main target during the renewed investigation drive targeting the election.

Sources said the public could expect to see a heightened propaganda drive on all these cases and a resumption of anti-Muslim slogans in relation to the Easter Sunday bombings in 2019. The Easter Sunday bombings will also be used to discredit the opposition which held office when the attacks took place but wil carefully avoid laying blame on former President Maithripala Sirisena who is now chairman of the SLPP-SLFP alliance and SLPP candidate from the Polonnaruwa district.

Colombo Telegraph learns however that instructions have been given to all true-burgundy SLPPers from the highest levels of the party to work behind the scenes to discredit President Sirisena which could leave him trailing in the preferential vote contests in his home district. Growing divisions within the SLPP-SLFP alliance will peak during the electoral contest in which the ruling party is running almost without a contest. SLPP candidates will be given funding and marketing opportunities exceeding SLFP candidates which could lead to the defeat of the SLFP group in several districts. Other divisions are also simmering between SLPP politicians and the Viyathmaga candidates more aligned to President Gotabaya Rajapaksa as the groups compete for party funding and presidential patronage for an edge in the polls.

The SLPP party wide poll campaign is being marketed under the theme “වැඩ කරන රටක් උගත් පාර්ලිමේන්තුවක්’ (“A country that works/a learned parliament)

However several bad eggs from the party including chill powder mixture thrower Prasanna Ranaweera and alleged Negombo drug lord Nimal Lansa have been given nominations to contest. (By Chinthika de Silva) 

1 கருத்துரைகள்:

Indeed, "IN JOURNALISM TRUTH IS A PROCESS". It should not be attracted only me but mostly many media is being functioned in our country. But they will never do it because this is the way for them to feed their stomach.

Post a comment