Header Ads



இலங்கையில் முழுமையாக கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது - கடற்படை தளபதி பியல் டி சில்வா

இலங்கையில் முழுமையாக கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி பியல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை கடற்படையினர் மட்டத்தில் பரவி வந்த கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வெலசர கடற்படை முகாமை, சுகாதார அதிகரிகளின் பரிந்துரைக்கமைய உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.

தற்போது முகாமில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் முகாமை வெகு விரைவில் திறக்க முடியும்.

சமகாலத்தில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள ஓரிரு கடற்படை சிப்பாய்களே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்களை தவிர்த்து முகாமில் புதிய கொரோனா நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. அத்துடன் கடற்படை கொரோனா கொத்துகள் தொடர்பிலான அவதானத்தை குறைத்துக்கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும் கடற்படையினரின் வேலைத்திட்டம் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் பாரிய அளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிபபிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.