Header Ads



'முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து, தமிழர்கள் விழிப்பாக இருக்கவும்'


ஊடக ஆரூடங்கள் என்ற பெயரில் வஞ்சனை செய்யும் பிரசாரங்களையிட்டு அம்பாறை மாவட்ட தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷணன் தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றில் அண்மையில் வெளியான தேர்தல் கணீப்பிடு, திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் எனும் ஆரூடம் தொடர்பில் இன்று (23) கருத்து வெளியிடுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் கருணா அம்மானுக்குரிய ஆதரவு அலை நாளுக்கு நாள் மேலெழும்பி வருவதை பொறுக்கமுடியாத முஸ்லிம் அரசியல்வாதிகள், ஊடகங்கள் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவான பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர். இதன் ஓர் அங்கம்தான் இந்தத் தேர்தல்க் கணிப்பீடு என்று எண்ணத் தோன்றுகிறது.

“முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை கிழக்கு மாகாணத் தமிழர்களிடையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பே எப்போதும் செல்வாக்கு பெற்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறுவதும் ஒன்றேயாகும்.

“அப்போதுதான் கிழக்கில் தமிழர்களுக்கெதிரான பாரபட்சமான செயற்பாடுகளை தங்குதடையின்றி தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என்ற வஞ்சக எண்ணமே அது.

“இதனையிட்டுக் கிழக்குத் தமிழர்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருந்து, முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் கூட்டுச் சதியை முறியடிக்க வேண்டும்” என்றார்.

No comments

Powered by Blogger.