Header Ads



சீனாவில் கரோனா தீவிரம்: பெய்ஜிங்கில் பள்ளிகள் மீண்டும் மூடல்

சீனாவில் இரண்டாம் கட்ட அலையாக கரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பெய்ஜிங்கில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இதுகுறித்து சீன ஊடகங்கள் தரப்பில், “சீனாவின் பெய்ஜிங் நகரில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் பள்ளிகள் அனைத்தும் பெய்ஜிங்கில் மூடப்படுவதாக கல்வி துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை தொடருமாறு பள்ளிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெய்ஜிங்கில் உள்ள புகழ்பெற்ற ஜின்ஃபாடி மொத்த காய்கறிச் சந்தைக்குச் சென்று வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்தச் சந்தை மூடப்பட்டது.

கடந்த மாதம் 30-ம் தேதியிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்குச் சென்று வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தொடங்கிய உணர்வை பெய்ஜிங் சூழல் ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கில் இதுவரை 106 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறும் சீன அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.