Header Ads



கிழக்கின் சகல தொல்பொருள் பிரதேசங்களையும், முகாமைத்துவம் செய்யும் பணிகளை விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி

(ஆர்.யசி)

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தொல்பொருள் பிரதேசங்களையும் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு ஜனாதிபதியின் விசேட செயலணியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் தேசிய மற்றும் சர்வதேச  ரீதியில் எழும் அழுத்தங்களை நிராகரித்து செயலணியின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு செயலணி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்பொருள் பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளை அளவீடு செய்யும் பணிகள் விரைவில் ஆரம்பிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பிலான முதலாவது கூட்டம் இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. செயலணியில் நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதேபோல் கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி செனரத் பண்டார திசாநாயக, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையாளர் நாயகம், மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் சில சிவில் அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதே செயலணி குறித்த அழுத்தங்கள் மற்றும்  செயலணி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தரப்பினர் மற்றும் சிவில் அமைப்புகள் மட்டுமல்லாது சர்வதேச சிவில் அமைப்புகள் முதற்கொண்டு எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் அது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தப்பட்டது.

 எனினும் கிழக்கின் தொளிபொருள் சார் சகல விவகாரங்களையும் ஜனாதிபதி செயலணி  அனைத்தையும் கையாள வேண்டும் இதில் எந்தவித எதிர்ப்புக் கருத்துக்களையும் செவி மடுக்காத விதத்தில் செயற்படுமாறு செயலணியில் அங்கம் வகிக்கும் தேரர்கள் எல்லாவல மேதானந்த தேரர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான விகாராதிபதி பனாமுரே திலகவன்ச தேரர்  ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவித்தனர்.

அதேபோல் செயலணியில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் எவரும் உள்வாங்கப்படாதமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட போதிலும் அதற்கு எந்த தரப்பில் இருந்தும் மாற்றுக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் கருத்துக்களை முன்வைத்த பாதுகாப்பு செயலாளரும் செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கமல் குணரத்ன சில காரணிகளை கூறியுள்ளார். 

இதில் யுத்தத்திற்கு பின்னரான அரசியல் மற்றும் சமூக சூழலில் தொல்பொருள்  பிரதேசங்களை பாதுகாப்பதில் பல்வேறுபட்ட முரண்பாடுகள், குழப்பங்கள், மாற்றுக்கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே இனியும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் தொல்பொருள் பிரதேசங்களை முழுமையாக பாதுகாத்து அந்தந்த இன, மத அடையாளங்களுடன் கொண்டுசெல்ல சகல ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இதில் இலங்கையர் என்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு இவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதுவே செயலணியின் வேலைத்திட்டமாக இருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.