June 19, 2020

ஸ்ரீலங்கா டெலிகொமில், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடு

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT)  என்பது ஒரு அரச உடைமையும் தலையீடும் கொண்ட தனியார்  சேவை நிறுவனம் என்பது அனைவருக்கும் தெரியும். இது எமது பகுதியிலும் கல்முனைக் கிளையை மையமாக  கொண்டு மிக நீண்ட நாளாக நன்மதிப்போடு  இயங்கி வருகின்றது. கல்முனையில்  முஸ்லிம்களும் தமிழர்களும்  நீண்ட நாட்களாக ஒற்றுமையாக  சக உத்தியோகத்தர்களாக  வேலை செய்து வருகிறார்கள்.

விற்பனை சந்தைப்படுத்தல், சேவை பராமரிப்பு என இங்கு ஊழியர்கள் அதிகம் கொண்ட இரு முக்கிய பிரிவுகள் உண்டு.

2019 இல் இருந்து ஒன்றிற்கு பொறுப்பாக காரைதீவைச் சேர்ந்த ஒரு தமிழ் முகாமையாளர் ஒருவரும் மற்றையதற்கு பொறுப்பாக அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் முகாமையாளர் ஒருவரும் இருந்தார். முஸ்லிம் முகாமையாளர் 2020 மே மாத ஆரம்பத்தில் ஒய்வு பெற்றார்.

SLT இல் 2018 இறுதி பகுதியில் ஏற்பட்ட உட்கட்டமைப்பு மாற்றத்தின் பின் 2019 ஜனவரி மாதத்திலிருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் சகோதரர் ஒருவர் கல்முனைக்கும் அம்பாரைக்கும் பொறுப்பாக DGM ஆக பணியாற்றுகிறார். 

இந்த மாற்றத்தின் பின்னர் முஸ்லிம் ஊழியர்களை இலக்கு வைத்து பல இனவாத  நடவடிக்கைகளும் அடக்கு முறைகளும் திட்டமிட்டு வெளிப்படையாகவும், மறைமுகமாவும் அங்கு அரங்கேற்றப்படுகின்றன.

2019 ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படக் கூடிய புதிதாக தொழில் பயிலுனர்கள் (Trainees) தெரிவில் எந்த ஒரு முஸ்லிமும் இடம் பெறவில்லை. இப்படியான வாய்ப்புகளுக்கு விண்ணப்பம்  கோரி பிரசுரிக்கப்படவுமில்லை. ஆனால் நேர்முக தெரிவு (interview) இடம்பெற்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மேலே சொன்ன சேவை பராமரிப்பு பிரிவுக்கும்  ஆள் சேர்ப்பதற்கான நேர்முக அமர்விற்கு முஸ்லிம் முகாமையாளருக்கும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லை.  மேலே சொன்ன இரு பிரிவுக்குமான பயிலுனர்கள் தெரிவில் விற்பனை சந்தைப்படுத்தல் முகாமையாளர் பங்குபற்றலுடன்  இடம்பெற்று நியமனமும் இடம்பெற்றது. எந்த முஸ்லிம் ஊழியரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. 

அதே போன்று 2019 இல்  ஊழியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போதும் இதே   போன்ற செயற்பாடே  நடந்தது. 2019 இடை நடுவிலும் இறுதி பகுதியிலும் சுமார் 10 பேர் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இதிலும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை, இது தெட்டத் தெளிவான இனவாத செயற்பாடும் பாரபட்ச நடவடிக்கையுமாகும்.

முன்னர் குறிப்பிட்ட முஸ்லிம் முகாமையாளர்  2020 மே மாதத்தில் ஒய்வு பெற இருந்ததால், அந்த இடத்திற்கு நிந்தவூரை சேர்ந்த கொழும்பு, தலைமைக் காரிலயாலத்தில் நீண்ட காலம் பணியாற்றிய  ஒரு முஸ்லிம்  பொறியியலாளர் விண்ணப்பித்து அவருக்கு இடமாற்றக் கடிதமும்  முன்கூட்டியே வழங்கப்பட்டும் இருந்தது. இந்த கடிதம் வழங்கப்பட்டு ஓரிரு தினத்திற்குள் அந்த  இடமாற்றத்தினை ரத்து செய்து அந்த இடத்திற்கு இவரை விட ஏறக்குறைய 8 வருடம் வேலை அனுபவம் குறைந்த கனிஷ்ட ஒரு தமிழ் பொறியியலாளருக்கு அந்த பதவிக்கான கடிதம் வழங்கப்பட்டு இப்போது நியமிக்கப்பட்டும் உள்ளது. இவர் ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் இனவாதக் கும்பலுடன் இணைந்து கொண்டு நல்லதை செய்வார் என்பது எதிர்பார்ப்பது முட்டாள்தனம். காரணம் இவரை ஒரு வருடத்திற்கு முன்னரே முகாமையாளரிற்கு கீழ் இயங்கும் ஓரு பொறியியலாளர் தேவை என்று சொல்லி கொண்டுவந்துவிட்டு இப்போது இவரையே முகாமையாளர் ஆக்கி அந்த பொறியியலாளர் பதவியும் நீக்கப்பட்டுள்ளது.

இதிலே இன்னொரு விடயம் என்னவென்றால் அந்த முஸ்லிம் பொறியியலாளருக்கு கல்முனை பதவிக்கு பதிலாக அம்பாறைக்கு முகாமையாளராக செல்லுமாறு பணிக்கப்பட்டு அங்கு கடமையை பொறுப்பு ஏற்கும் தினத்தில் (மே, 2020 ) அந்த இடமாற்றமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காரணம், அம்பாறை ஊழியர்கள்,   முஸ்லிம் ஒருவர் கல்முனைக்கு வர இருந்து அங்கு சம்பந்தப்பட்ட தமிழ் முகாமைக்கு  பிடிக்காததால் அம்பாரைக்கு மாற்றப்படுள்ளார் என்ற செய்தியை பெளத்த மதகுருமாருக்கு சொல்ல,  முஸ்லிம் பகுதியிலேயே வேலை மறுக்கப்பட்டவருக்கு அம்பாறையில் ஏன் வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று மேல் மட்டங்களுக்கு அழுத்தம் கொடுத்து இடமாற்றத்தினை நிறுத்துவதில் வெற்றியும் கண்டனர்.

இந்த இன ரீதியிலான உரிமை மீறல் செயலை கேள்விக்குட்படுத்தி  பெரிதாக எந்த ஒரு நடவடிக்கையும் யாரும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இப்போது கல்முனையில் உள்ள இரண்டு முகாமையாளர்களும் தமிழர்களாக  இருப்பதால்  முஸ்லிம் ஊழியர்களை ஓரங்கட்டும் செயலை விரும்பிய வழியில் நிறைவேற்றும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு காலமும் பிரிவினை இல்லாமல் சகோதரர்களாக வேலை செய்து வந்தவர்களுக்கு மத்தியில் இன ரீதியிலான பிரிவினைவாதம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அது கோரத் தாண்டவமும் ஆடுகிறது.

இவ்வருடம், அண்மையில் இரண்டு முஸ்லிம் ஊழியர்கள் தமது சேவையிலிருந்து முன்கூட்டி ஒய்வு பெற்றுள்ளார்கள்.

ஒருவர் கல்முனை டெலிஷொப் (வாடிக்கையாளர் சேவை நிலையம்)  இல் செய்து வந்த பெண், அவர் தனது மகனை சுகயீனம்  காரணமாக கொழும்புக்கு அழைத்து செல்ல லீவ் கேட்டுள்ளார், அதற்கு மேனேஜர் அவருக்கு இந்த லீவு எடுத்தால் இந்த வருடத்தில் எந்த லீவும் எடுக்க முடியாது என்று மிரட்ட கோபப்பட்டு VRS இல் ஒய்வு பெற்றுள்ளார். அவர் இந்த பிரச்சினையை உரிய முறையில் அறிவித்திருந்தால் நிச்சயமாக தவறாக  மேலாண்மை செய்தமைக்காக எச்சரிக்கை செய்யப்பட்டு இனவாத நடடிக்கைகாளை கட்டுப்படுத்த உதவி செய்திருக்கும்.

மற்றவர் ஒரு ஆண், அவரின் முடிவுக்கு காரணம் தங்களுக்கு உரிய நாளாந்த வேலையை முடித்தாலும், தனக்கு பிரிவுக்கு  சம்பந்தமில்லாத பொறுப்பதிகாரி மறைமுகமாக கெடுபிடிகளை அதிகரித்து தங்களை நோட்டமிடுவதும் அதற்கு துணையாக சில முஸ்லிம் ஊழியர்களும் நல்ல பேர் வாங்க தகவல் பரிமாறுதல் செய்வதுமாக இருப்பதைக்கண்டு  மனம் நொறுங்கி VRS இல் ஒய்வு பெற்றுள்ளார்.

கெடுபிடிகள் அதிகரிக்க ஓய்வு பெறுவது எல்லா நேரங்களிலும் சரியாகாது. உரிய தரப்பிற்கு பிரச்சினைகளை   எத்தி  வைத்து  விட்டாவது  ஓய்வு பெற்றால் ஏதோ ஓரு வழியில் சக ஊழியர்களுக்காவது உதவும்.

சமூக நல்லிணக்கங்களை ஏற்படுத்தும் நல்ல வாய்ப்புகளும் வீணடிக்கப்படுகின்றன. இவ்வாறு வெளிப்படையாக குரோதம் இருக்கும் போது பல்லின சமூகம் வாழும் பிரதேசத்திற்கு உகந்த நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக 2019 இல் SLT அனுசரணையுடன் பாடசாலைகளுக்கு  இடையிலான Big Match நடாத்தப்பட்டது. பல்லின மக்கள் உள்ள எமது பகுதிக்கு பொருத்தமாக ஒரு முஸ்லிம் இன்னொரு தமிழ் பிரதேச பாடசாலைகளுக்கு இடையில் நடந்திருந்தால் நன்றாக அமைந்திருக்கும், ஆனால் அதற்கு 2 தமிழ் பாடசாலைகளே (கல்முனை,காரைதீவு)   தெரிவு செய்யப்பட்டன.

இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் இவை எல்லாமே இடம் பெறுகிறது. எமது மக்கள் நேர்த்தியான அணுகுமுறை இல்லாதவர்கள் என்பதால் இன்னும் எத்தனை முறைகேடுகள் அரங்கேற்றப்படத்தான் போகிறதோ தெரியவில்லை.

இன்னும் பல சம்பவங்கள் உள்ளன. நடக்கின்ற கதைகளை அடுக்கிக்கொண்டு செல்வது நோக்கமல்ல.இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் உள்ளன.

1. கல்முனை டெலிகொம் இல் அதிக வாடிக்கையாளர்கள் முஸ்லிம்கள். கல்முனை,  மருதமுனை , நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை,  நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய அதிக முஸ்லிம்கள்  வாழும் பிரதேசங்களில் இருந்து அதிக இலாபம் ஈட்டும் கல்முனை டெலிகாம் இலேயே முஸ்லிம்கள் இலக்கு வைக்க படுகிறார்கள் என்றால், சமூகம் என்ற ரீதியில் நாம் மிக்க பின்தங்கிய  நிலையில் உள்ளோம். நாம் பெரிதாக எதுவும் செய்யப்போவதில்லை என்ற தைரியம். அதை உடைப்பது மக்களின் கையிலும் இல்லாமல் இல்லை. வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும்போதும் அத்துடன் சேர்த்து காரணத்தையும் பகிரங்கப் படுத்தினால் நிச்சயம் இதில் மாற்றங்கள் ஏற்படும்.

2. இலங்கையில் தொழிலாளர் சட்டம் ஊழியர் பக்கம் தான் அதீத கனதியானது. அப்படி இருந்தும் இங்கு இடம்பெறும் வெளிப்படை அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணியற்று  மெளனம் காப்பது கவலயான ஒரு  விடயம். குட்டக் குட்டக்  குனிந்தால் மேலும் குட்டு வாங்கத்தான் வரும்.

3. பொதுவாக மேலதிகாரிகளை பகைத்துக்கொண்டு வேலை செய்வது கடினம். அவர்களின் குணங்கள் அறிந்து செயற்பட்டால் நல்லது. அது சாதாரண நடைமுறை விடயங்களில் அனுசரித்து போகலாம். ஆனால் இனம் என்ற காரணத்துக்காக ஒடுக்குவதற்கு  அனுமதிக்காக கூடாது. அதற்கு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க  முன் வர வேண்டும். கடந்த 18 மாதங்களில் எந்த ஒரு முஸ்லிமும் புதிதாக சேர்க்கப்படவில்லை, எந்த முயற்சியும் எடுக்காவிடடால் புதிய வேலை வாய்பில் எம்மக்களுக்கு இடமே இருக்காது.

4. இவர்களுடைய இந்த இனவாத செயற்பாட்டுக்கு துணையாக தனிப்பட்ட இலாபங்களை அடையும் நோக்கோடு அல்லது பயத்தின் காரணமாகவோ ஓரிரு முஸ்லிம்களும் கேவலமாக    துணையாக உள்ளார்கள். இவர்கள் நன்றாக கவனிக்கப்படுகிறார்கள், மதிப்பீடுகளும்,  அனுகூலங்களும்  நன்றாக வழங்கப்படுகின்றன.   துணை போகாதவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள்.  நயவஞ்சகர்கள் இல்லாத இடமா ?

5. இதுவரைக்கும் மேலதிகாரிகள்தான் இந்த இனவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள். சக தமிழ் சகோதரா ஊழியர்களின் நடத்தையில் பெரிதாக மாற்றம் வரவில்லை. ஆனால் புதிதாக சேற்றுக்கொள்ள பட்டவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்த பொறிமுறையில் உள்வாங்கப்படுவதால் அவர்களின் பற்றி  கூற முடியாது. அத்தோடு அண்மைக்காலமாக தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி அதில் அரசியல் இலாபம் அடையும்  திடடம்   கிழக்கு மாகாணத்தில் (கல்முனை உட்பட) அரங்கேற்றபடுவதால் அந்த  நிகழ்ச்சி நிரலின் அங்கமாக கூட இந்த நடவடிக்கைகள் இருக்கலாம்.

 ஆகவே இதனை சமூக ரீதியாக தோற்கடிக்க வேண்டும். எமது மக்களுடைய பணத்தில் வருமானம் ஈட்டி எமது மக்களையே திட்டமிட்டு புறக்கணிப்பவர்களுக்கு  நல்ல பாடம் புகட்டட வேண்டும். அதிஷ்டவசமாக SLT ஒரு இலாப அடிப்படையிலான போட்டி நிறுவனமாக இருப்பதாலும் அதே சேவைகளை வேறு நிறுவனம் ஊடாக பெற்றுகொள்ள முடியுமாக இருப்பதால் எமது கையிலும் இதனை நிறுத்தும் துரும்பு உள்ளது. இனவாத நிலைமை மாறி பழைய  நிலைக்கு வரும் வரையில்

1. புதிதாக இணைப்புகள் எடுப்பதை தவிர்த்தல். சந்தைப்படுத்தல்களைப் புறக்கணித்தல்
2. பாவனையற்று கட்டணம் மட்டும் செலுத்தும் இணைப்புகளை துண்டித்தல்
3. மாற்று நிறுவங்களிடமிருந்து சேவைகளை பெறல்
4. கட்டணமப் பெறுமானத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தல்.
5. வியாபாரிகள் இது பற்றி கவனத்தில் கொள்ளல்.
6. சட்ட துறையிலுள்ள முஸ்லிம்கள் ஊழியர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கல்.

இந்த தவல்களை கல்முனையிலுள்ள நம்பிக்கையான முஸ்லிம் ஊழியர்களிடம்  கேட்டு தெரிந்தும் உறுதிப்படுத்தியும்  கொள்ளலாம்.ஆகவே, நியாயத்தை நிலை நாட்ட அனைவரும் ஒன்றிணைவோம். 

2 கருத்துரைகள்:

நம்முன் ஒரு மசிரும் பிடுங்க மாட்டோம் என்கிற தைரியம் தான் இந்த இழிவான தமிழ் இனவாதிகள் எல்லா இடத்திலும் கை வைக்கின்றார்கள். உடனடியாக இந்த முகாமையாளன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் இல்லையென்றால் முஸ்லிம்கள் டெலிகாம் சேவையை புறக்கணிப்பதாக ஒவ்வொரு பாவனையாளர்களும் கொழும்பு டெலிகாம் தலைமைக்கு ஒரூ அழைப்பை ஏற்படுத்தி மிரட்டல் விட்டால் போதும்

காரியாலயங்களில் இவ்வாறான இனத்துவேசமான நடவடிக்கைகள் நடப்பதில் உண்மையும் உள்ளது கட்டுக்கதைகளும் உள்ளன.ஒரு சில ஊழியர்களின் நடவடிக்கைகள் மோசமாக தென்படும் பட்சத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தால்,அவர் தான் சார்ந்த இனமாக இல்லாமல் இருந்தால் உடனே அவருக்கு துவேக்ஷக்கார் என்ற பட்டத்தை புனைந்து தனது பிழைகளை பறைக்கப்பாப்பது ஒரு முறையாம். ஆனால் இங்கு எப்படியோ தெரியாது.மேலதிகாரி என்பவர் இனம் பிரதேசம்,உறவுமுறை என்பவைகளுக்கு அப்பால் நீதியாக மனிதாபிமான முறையில் செயல்படுபவராக இருந்தால் அக்காரியாலயம் இன நல்லிணக்கத்தின் உறைவிடமாக திகழ்ந்து ஒருவருக்கொருவர் அன்பும் பண்பும் உள்ளவர்களாக இருப்பதுடன் காரியாலயம் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து கருமாற்றி நற்பெயரைப்பெறும்.எனவே இங்கு எந்த இனத்தவர் தலைமை பொறுப்பிற்கு வரவேண்டும் என்ற வாதங்களை விடுத்து நீதி நேர்மயுள்ள அர்ப்பணிப்போடு பணிசெய்யக்கூடியவர் வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதுதான் முறையாகும்.எனவே ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பு என்பது மிகவும் அமானிதமானது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.

Post a comment