Header Ads



3/2 பெரும்பான்மைக்கும் அதிக ஆசனங்களை கைப்பற்றி, பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே எமது இலக்கு - மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். தேசிய அரசாங்கத்தை போன்று  பலவீனமான  அரசாங்கம் தோற்றம்  பெறுவது பயனற்றதாகும். பொருளாதாரத்தை முன்னேற்றமடைய செய்யும் எவ்வித கொள்கை திட்டங்களும் எதிர் தரப்பினரிடம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல்- வதுராகல  பிரதேசத்தில் இன்று, திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் கத்தோலிக்கமத தலைவரை அவமதிக்கும் விதத்தில் கருத்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. மதம், மற்றும் மத தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் செயற்படுபவர்கள்   அழிவினை நோக்கி பயணிக்கிறார்கள் என்றே  கருத   வேண்டும். அந்த  அழிவு  அவர்கள் சார்ந்துள்ள  கட்சியினையும் சாரும்.

 இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப் பெறும். இந்த வெற்றி சாதரணமாக அமைய கூடாது மாறாக பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.  ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்கள்  சுபீட்சமான  எதிர்காலத்தை நோக்கியதாக  உள்ளது.  இந்த திட்டங்களை  நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே முன்னேற முடியும்.

 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தலைமையிலான  தேசிய அரசாங்கம் பலவீனமானது. இரண்டு தலைவர்களும் முரண்பட்டுக் கொண்டமையினால் முழு அரசசெயலொழுங்கும் பலவீனமடைந்தது. இவ்வாறான  நிலைமையினையே மீண்டும் தோற்றுவிக்க ஐக்கிய மக்கள் சக்தியினர் முயற்சிக்கிறார்கள்.  தேசிய அரசாங்கத்தை போன்று முரண்பட்ட அரசாங்கம்  மீண்டும் தோற்றம் பெற்றால்  நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள்.

ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும். ஐக்கிய தேசிய கட்சி ரணில் அணி, சஜித் அணி என இரண்டாக பிளவுப்பட்டுள்ளது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை  முன்னேற்றுவது, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ஆகிய விடயங்கள்  தொடர்பில் எவ்வித   திட்டங்களும் கிடையாது. இரு  தரப்பினரும் கட்சியின்   உள்ளக பிரச்சினைகளுக்கு  தீர்வு  காண முரண்பட்டுக் கொள்கிறார்கள்.   இவர்களிடம் ஆட்சியதிகாரம் சென்றால் அது  பயனற்றதாகவே  அமையும்   .

  பொதுத்தேர்தலில்  மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களை  கைப்பற்றி பலமான அரசாங்கத்தை  ஸ்தாபிப்பதே எமது பிரதான  இலக்கு.  ஜனாதிபதி தேர்தலில் அரசியல் ரீதியில் மக்கள் எடுத்த தீர்மானத்தை பொதுத்தேர்தலில்  எடுத்து  பலமான அரசாங்கத்தை  தோற்றுவிக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. சென்ற முறை தோல்விக்கோர்
    சோதிட நம்பிக்கை;

    இம்முறை தோல்விக்கோர்
    இனத் துவேஷத் தகனப் பிடிவாதம்;

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

    உள்ளங்களை ஆள்பவன் எவனோ,
    அவனே மாபெரும் சூழ்ச்சியாளன்!

    ReplyDelete

Powered by Blogger.