Header Ads



தேர்தல் நடத்தப்பட்டால், அது தமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே எதிர்க்கட்சிகளின் கவலை - மஹிந்த

இலங்கை அரசியலமைப்பின் 150 (3) வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தால் நிதி ஒதுக்கப்படாத எந்த நோக்கத்திற்காகவும் நிதியை ஒதுக்க ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று -03- வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மேற்பார்வை இல்லாமல், கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரசாரத்திற்காக ஒதுக்கப்பட்ட வெளிநாட்டு நிதியை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தும் என்பது எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளில் ஒன்று என்பதை சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ஷ, அத்தகைய நிதியைச் செலவிடுவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் புதிய நாடாளுமன்றம் கூடியவுடன், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் செலவீனங்கள் குறித்து கேள்விகளை எழுப்ப முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் அரர இயந்திரங்கள் யாவும் கொரோனா எதிர்ப்பில் தமது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளன. இதன் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த தேசிய நெருக்கடி மற்றும் உலகளாவிய பேரழிவின் மத்தியிலும் கூட, இந்த நாட்டில் அரசியல் எதிர்ப்பின் விரும்பத்தகாத கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பழைய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்க சேவைகளை பராமரித்தல். நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாதுபோனால் ஜனாதிபதியும் அரசாங்கத்தில் உள்ள அனைவரும் குடியுரிமையை இழப்பர் என்றும் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகள் இல்லாதபோது மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

முதல் கொரோனா வைரஸ் நோயாளி ஒன்றரை வாரங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்இ தேர்தல் ஆணைக்குழு தேர்தலை ஜூன் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பொறுத்து தேர்தலை மேலும் ஒத்திவைக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.

எனவே தேர்தல்கள் ஆணைக்குழு தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு ஏற்ப தேர்தலை பொருத்தமான நேரத்தில் நடத்தும்.

இந்தநிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கை மற்ற நாடுகளை விட மிகச் சிறந்த முடிவுகளைக் காட்டிய சூழ்நிலையில் தேர்தல் நடத்தப்பட்டால், அது அரசியல் ரீதியாக தமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே எதிர்க்கட்சிகளின் கவலையாக உள்ளது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவேதான் எதிர்க்கட்சிகள் பழைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோருகின்றன. பழைய நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், அரசாங்க நிதிகளைத் தடுத்து அதன்மூலம் கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையை நாசமாக்கி தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாகும் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை கணக்கு மீதான வாக்கெடுப்பை நிறைவேற்றியதாகவும், எனவே, இந்த திக்திக்கு பின்னர் எந்தவொரு நோக்கத்திற்காகவும் நிதி ஒதுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இது ஒரு அபத்தமான வாதம். அரசியலமைப்பின் 150 (3) வது பிரிவின் கீழ், எந்தவொரு நோக்கத்திற்காகவும் நாடாளுமன்றத்தால் நிதி ஒதுக்கப்படாத நிதியை ஒதுக்க ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.