Header Ads



பெருநாள் "கொண்டாட்டம்" தவிர்ப்போம் - கிண்ணியா உலமா சபைத் தலைவர்


கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.அஷ்ஷெய்க் ஹிதாயத்துள்ளா (நளீமி)

உலகினதும் தற்போதைய நிலையில் ஒரு முஸ்லிம் கொண்டாட்டம் தவிர்த்து பெருநாளை அமைதியான முறையில் அனுஷ்டித்தல் அவசியமாகும்.

இலங்கைச்சிறுபானுமை நிலை மறந்து நமது மாவட்டத்திற்குள் கொ. வைரஸ் தொற்று ஊடுருவியுள்ளமை மறந்து, கொரோனா சுகாதார ஆலோசனைகளை பொருட்படுத்தாது, புடவை, நகைக்கடைகளில் ஆண்களும், பெண்களும் நெருசலடையும் காட்சி மனவேதனைமிக்கதும்  பல வகையில் ஆபத்தானதும் ஆரோக்யமற்றதுமாகும்.

ஆக இம்முறை...

# கொரோனா நீங்கிய ஆடம்பரமற்ற மிக எளிமையான ஈதுல்பித்ரை சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் 

# கடைகளுக்கு பெண்கள், குழந்தைகள் செல்வதை தயவுசெய்து தவிர்ப்போம்

# தவிர்க்க கமுடியாத தேவை நிமித்தம் கடைகளுக்குச் செல்லும் ஆண்கள் முக்கவசம், சமூக இடைவெளி, கைகழுவுதல் உள்ளிட்ட சுகாதார அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கவும்
# கடை உரிமையாளர்கள் குறித்த ஒழுங்குகளை மேற்கோள்வதோடு ஒரு பணியாளரை வாயிலில் அமர்த்தி உரிய நடைமுறைகளை உறுதிப்படுத்த, வந்து செல்லும் வாடிக்கையாளர்களை ப்பதிவு செய்தல். 

# இவ்விடயங்களை அதிகமதிகம் ஞாபகமூட்டி மற்றவர்களுக்கும் பகிர்வோம்

இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் தங்களது பெருநாட்கள், விசேட நிகழ்வுகளை மிக அடக்கமாக அனுஷ்டித்துச்செல்வதையும் கருத்திற்கொண்டு நமது ஈமானிய சொந்தங்களும் அன்புமிக்க கடை உரிமையாளர்களும் நிச்சயம் வரும் திங்கள் முதல் அழகியமுறையில் நடந்து "கொண்டாட்டத்தினை" விட பிரதேசத்தினதும் நாட்டினதும் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதிற்கொண்டு செயற்படுமாறு அன்பாகவுகவும் அழுத்தமாகவும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
யா அல்லாஹ்! 

இந்த ரமழானோடு இந்நாட்டைப்பீடித்துள்ள எல்லாவகையான சோதனை களிலிருந்தும் எமது சமூகத்தையும் நாட்டுமக்களையும்பாதுகாத்து உனது மஸ்ஜித்களையும் அருள்வாயில்களையும், றையானையும் எமக்கு அவசரமாய் திறந்தருள்வாயாக, 

உயிருள்ள ஜீவன்கள் உரி மைகளோடு வாழவும் மரணித்த ஜனாஸாக்கள் கடமைகளுடன் கண்ணியமாய் அடக்கம் செய்யப்படவும் இப்பூமியில் அருள் செய்திடு சர்வ வல்லமைமிக்க ரஹ்மானே!

No comments

Powered by Blogger.