May 17, 2020

பேஸ்புக்கை ஆக்கிரமித்துள்ள ஒரு புகைப்படம் - “இஸ்ரேலின் ஆரம்பமும் முடிவும்”


பலஸ்தீன தம்பதியர்களின் வீடு எப்போதோ சூறையாடப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் கையில் இருக்கும் நிலையில் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் பார்வையிடும்போது எடுக்கப்பட்ட படம் இன்று முகநூலை ஆக்கிரமித்துள்ளது. இதற்கு பொருத்தமாக இந்த ஆக்கம்.

இஸ்ரேலின் ஆளும் “லிகுட்” கட்சி “தனி நாட்டுக்கு பகரமாக சமாதானம்” என்ற திட்டவரைபை மறுத்தே வருகிறது. அரபுகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியை இஸ்ரேலின் புனித பூமியாகவே அது கருதிவருகிறது. “யூதர்கள் கால் தடம் பதித்த பூமியெல்லாம் அவர்களுக்கான பூமியே” என்ற தௌராத்தின் போதனையை இஸ்ரேலில் அத்துமீறிய குடியேற்றங்களால் தான் நினைத்தவாறு நடைமுறைப்படுத்தி வருகிறது.

தனி நாடு என்ற கோப்பு மூடப்பட்டது, இந்த அடிப்படையில் இஸ்ரேலுக்கு அரபுகள் அமைதியை கொடுத்தால் இஸ்ரேல் அரபுகளுக்கு அமைதியை கொடுக்கத் தயாராக உள்ளது. அதாவது “தனி நாட்டுக்கு பதிலீடாக அமைதி” என்ற பேச்சுக்கு இடமே இல்லை இஸ்ரேலிடம். பலஸ்தீனம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும், குத்ஸ் இஸ்ரேலின் தலைநகரமாக இருக்கும். முஸ்லிம்கள் அங்கு வருகை தந்து தமது புனிதஸ்தளங்களை பார்வையிடலாம், பாத்திஹா ஓதலாம், பின் வந்த இடத்துக்கு திரும்பி சென்று விடவேண்டும். இதைத்தான் நேதன்யாகூ சமாதானத்துக்கான திட்டமாக புன்வைக்கிறார்.

வட்ட மேசை மாநாடுகளில் மத்திய கிழக்கின் நூறு மில்லியன் அரபுகளும், ஆயிரம் மில்லியன் உலக முஸ்லிம்களும் ஒரு தரப்பாகவும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மறு தரப்பாகவும் இருக்கும் நிலையில் முழு பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்குத்தான் என்ற ஒற்றை நிபந்தனையை ஆக்கிரமிப்பு தரப்பு முன்வைகிறது. அதுவே சமாதனாத்துக்கான ஒரே வழி, அதுவே இரு தரப்பும் கைகுழுக்கி கையொப்பமிட ஒரே தீர்வு என்கிறது ஆக்கிரமிப்பு தரப்பு. பாவம் செய்வதைவிட செய்யும் பாவத்தை கௌரவமாக நினைப்பதுதான் மிகக் கொடுமையான ஒன்று.

இந்த பாவக்கறை கொண்ட கௌரவத்தை இஸ்ரேலுக்கு வழங்கியது அமெரிக்காவும், ஐரோப்பாவும். அதே நேரம் முஸ்லிம்களின் பலயீனம், முஸ்லிம்களின் பிரிவினையும் காரணமாகும். ஒரு மில்லியன் முஸ்லிம்களின் எண்ணிக்கை அளவு அவர்களின் சத்தம் ஓங்கி ஒலிக்கவில்லை. இந்த துரோக குற்றத்தில் இவர்கள் எல்லோரும் பங்காளர்களே. இவர்கள் எல்லோரும்தான் இந்த ரெத்தக் கறை படிந்த குற்றத்துக்கு பரிகாரம் செய்ய வேண்டும். தீர்வு தேட வேண்டும்.

ஐரோப்பாவின் தெருவில் திரியும் நாயொன்று தாக்கப்பட்டால் அதை எதிர்த்து பாதைகளில் மிருக காப்பாளர்கள் போராட்டம் நடத்துவர். பொஸ்னியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக 187 இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது. 90 மில்லியன் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் எலும்புகளுடன் அரைக்கப்பட்டு பன்றிகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டது. எகிப்தில் சைனா பகுதியில் ராணுவ வீரர்கள் கூண்டாக கொலை செய்யப்பட்டார்கள். இதை எதிர்த்து இஸ்லாமிய நாடுகளில் ஒரு பேரணிகூட போனதாக தெரியவில்லை.

1000 மில்லியன் முஸ்லிம்களையும் 13 மில்லியன் யூதர்களைக் கொண்ட இஸ்ரேலையும் ஒரே தராசில் நிறுவைக்கும் வைக்க முடியாது. இஸ்ரேலின் அணு ஆயுதம் இந்த சமூக திரளுக்கு முன்னாள் எதுவும் செய்துவிட முடியாது, சோவியத் ரஷ்யா வீழ்வதிலிருந்து ரஷ்யாவை அணு உலைகள் காப்பாற்ற வில்லை.

ஆயுதங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நாகரீகமான நல்ல வெற்றியை ஏற்படுத்தவே முடியாது. தாத்தாரியர்கள் முஸ்லிம்களை வெற்றிகொண்டதனால் எதனை சாதித்தார்கள்?. வெற்றி பெற்றபோதும் அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்ததுதான் முடிவாக இருந்தது. திட்டம் தீட்டியவர்களின் எண்ணங்களைவிட நடந்து முடிந்த சம்பவங்கள் மிகவும் பெரிது.

எதிரிகளை முகம் கொடுக்கும் எந்த ஒரு நாடும் அதன் ஆட்சியாளர்கள் விட்ட தவறுக்காகவே தவிர அதன் தனித்துவத்தை, பொருளாதரத்தை, இறைமையை இழக்கவில்லை.

சர்வதேச நாடுகளுடன் கைகோர்த்து அரபுகள் ஈராக்கை எதிர்த்து யுத்தம் செய்தனர். அமெரிக்காவின் கையைக் கொண்டு நீங்கள் ஈராக்கை தாக்குகின்றீர்கள். இந்த வெற்றியின் முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும், உங்களுக்குள் வெறுப்புணர்வு தோன்றும். ஒருவரை ஒருவர் வெறுப்பீர்கள். இதன் பிற்பாடு அரபுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியுறும். சதாம் ஹுசைனை அமெரிக்கா ஆட்சியில் வைத்துக்கொள்ளும், அரபுகளிடம் பணம் கறக்கும் தேவைக்காக சதாமைக் கொண்டு அரபுகளை அச்சுறுத்தும். அப்போதே நாம் இதை எச்சரித்தோம். இதுதான் நடந்தும் முடிந்தது.

திட்டமிட்ட மிகப்பெரும் பொறியை அமெரிக்கா செய்து முடித்தது, நாம் எல்லோரும் சேர்ந்து அனுபவித்தோம். அரபுகளுக்காக அரபுகளின் பெற்றோலை பாதுகாத்தல் நடவடிக்கை எனும் கோஷத்துடன் அரேபிய தீபகற்பத்துக்குள் அமெரிக்கா நுழைந்தது. அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் செலவாகும் ரசிதை நாம்தான் பணமாகவும், பெற்றோலாகவும் கொடுக்கும் பொருப்பெடுத்தோம். இதன் காரணமாகவே அரபுகளின் பொருளாதாரம் பூச்சியத்துக்கு கீழ் விழத்துவங்கியது. இது அமெரிக்காவின் முதல் கட்ட சூழ்ச்சியாக வெற்றிபெற்றது.

இதற்கடுத்த சூழ்ச்சிதான் பொருளாதாரம் வீழ்ந்த நிலையில் இருக்கும் நாடுகள் கடன்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை ஏற்படுத்தி பெரிய முன்னேறிய நாடுகள் ஊடாக அரபுகள் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ள செய்யும் அமெரிக்காவின் திட்டம். அரபுகள் தமது பூமியில் ஒரு வளர்ப்பு பிள்ளையாக இஸ்ரேலை மடியில் தாங்கிக்கொள்ளச் செய்யும் திட்டம்தான் இது. இதன் ஊடாக இஸ்ரேல் தயாரிக்கும் உற்பத்திகளை எல்லோரும் சேர்ந்து அனுபவிக்கலாம் என்பதுதான் இவர்களின் சூழ்ச்சி.

இஸ்ரேல் தனது அநியாயங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் புதிய புதிய பெயர்களை சூட்டிக்கொள்ளும். " நிலத்தை கொல்லையடித்தலுக்கு “சூழ்நிலையை சரி செய்தல்” என்று பெயர் வைக்கும். ஆக்கிரமிப்புக்கு “குடியேற்றம்” என்று பெயர் வைக்கும். பக்கத்து வீட்டு பலஸ்தீனியனை கொலை செய்வதை “நீதி நிலைநாட்டளுக்கான நடவடிக்கை” என்று சொல்லும். சிறையில் உள்ளவர்களை வேதனை செய்வதை “சட்டபூர்வ நடவடிக்கை” என்று சொல்லும். உளவுத்துறையை “ ஊடகத்துறை குழு” என்று சொல்லும். அடாவடித்தனமான ஆக்கிரமிப்பை “சமாதானம்” என்று சொல்லும்.இப்படி தனக்குத் தேவையான அத்துமீறல்களை செய்வதற்கு ஏற்ப சட்டங்களையும், நீதியையும் போட்டுக்கொள்ளும்.

இஸ்ரேல் அப்பாவி பொதுமக்களை மட்டுமல்ல, அவர்கள் தலைவர்களை இலக்குவைத்தும் காய் நகர்த்தும். சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடு அதற்கில்லை. ஒரு நாட்டை சூறையாட தலைவமைத்துவத்தை சீர்குலைத்து அந்த நாட்டை பலவீனப்படுத்தும் வேலையையும் இஸ்ரேல் செய்யும். இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ஹாக் லண்டனில் வைத்து கூறுகிறார்: “ஹாபிஸ் அல் அசதை வீழ்த்தும் ஒரு தாக்குதல் ஒன்றை சிரிய மக்கள் எதிர்பார்க்கட்டும்” இவ்வாறு கூறி ஒரு வாரம்கூட ஆகாத நிலையில் சிரியாவுடன் யுத்தத்தை இஸ்ரேல் நடத்துகிறது, “ஹாபிஸ் அசாதின் பிடியிலிருந்து நாடு விலகாதவரை யுத்தம் நீடிக்கும்” என்று இஸ்ரேலின் அமைச்சர் நாதன் கூறுகிறார்.

பொது மக்களைவிட அதிபர்களே இஸ்ரேலின் இந்த பயங்கரவாத நடவடிக்கையின் முதல் பலியாடுகள். அரபு அதிபர்கள் ஒன்று படவேண்டும். இந்த காட்சிகளை கண்டாவது அவர்கள் அறிவுபெற வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இது உங்கள் ஒவ்வொருவரையும் இலக்கு வைத்த பொதுமைப்படுத்தப்பட்ட முசீபத்தாகும். நீங்கள் யாரும் தப்பிக்கப் போவதில்லை.

பேரறிஞர் டாக்டர் முஸ்தபா மஹ்மூத் “இஸ்ரேலின் ஆரம்பமும் முடிவும்” எனும் நூலில் எழுதிய ஒரு பகுதி.

மொழியாக்கம்: AHAMEDSHA AHAMED JAMSATH (AL AZHARI)

0 கருத்துரைகள்:

Post a Comment