Header Ads



ACJU விடயத்தில் இஸ்லாமிய வீரோதிகளின், வலையில் சிக்கிக் கொள்ளவேண்டாம்

- அபூ ஹபீப் -

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் மற்றும் ஜம்இய்யாவின் சேவைகளை விமர்சனம் செய்வதில் அன்மைகாலமாக சிலர் தீவிரம் காட்டி வருகின்றமையை சமூக வலை தளங்களினூடாக காணக்கிடைத்து. பொதுவாக எமது சமூகத்தில் சிலர் இவ்வாறே தங்களை பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனர்.

 இஸ்லாமிய தலைமைகள் எதை செய்தாலும் அதில் திருப்தி காணமல் தீவிர போக்குடைய இஸ்லாமி விரோதிகளை விடவும் முஸ்லிம்களை கொச்சைப்படுத்துவதிலும், அதன் ஆளுமைகளை மட்டம் தட்டுவதிலும், தான் ஆதரிக்கும் அரசியல் கச்சிக்கு ஆதரவை அதிகரித்துக்கொள்ள எப்படியெல்லாம் நரிதந்திரத்தை பாவிக்க முடியுமே அதில் எல்லை மீறி விடுகின்றனர். 

நயவஞ்சக செயற்பாடுகளில் மிக்க ஆர்வம் காட்டும் இவர்கள் தங்களை சமூக நலன் விரும்பிகள் என்று  காட்டிக்கொள்ள விரும்புகின்றனர்.

 உண்மையில் கன்டதையெல்லாம் விமர்சனம் செய்வது உலவியல் கண்ணோட்டத்தில் ஒரு மனநோயாகும் என்பதை அவர்கள் விழங்க வேண்டும். 

இவ்வாறு செயற்படுவோறில் அதிகமானவர்களின் குடும்ப வாழ்கையும் பரிதாபகரமான நிலையில் தான் இருக்கும், காரணம் தனது மனைவியின் நடத்தையையும், அவளின் பணிகளிகளையும் புகழாது, அதில் உள்ள நிறைகளைப்பார்த்து திருப்தி கொள்ளாது, எப்போதும் அவளை குறை சொல்லுவதிலும், அவளின் பலவீனத்தை சுட்டிக்காட்டுவதிலும், தான் செய்வதுதான் சரி என்பதிலும் பிடிவாதமாக இருப்பவரின் குடும்ப வாழ்கை எப்படி இருக்கும் என்பதை நீங்களே விளங்கிக் கொள்வீர்கள்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயற்பாடுகளையும், அதன்  அனுகு முறைகளையும்,  உலக  முஸ்லிம்களும், குறிப்பாக சிறு பாண்மையினராக வாழ்பவர்கள் பாராட்டுவதுடன், தாம் வாழும் நாட்டில் இதனை நடைமுறை படுத்துவதற்கு ஜம்இய்யாவை நாடுவதில் ஆர்வம் காட்டுவது என்பது  சாதாரன விடயமல்ல. 

மக்தப் குர்ஆன் வகுப்பிலிருந்து, சமூக சேவையென, பத்வா வழிகாட்டல், கல்வி,  சகவாழ்வு மற்றும் சமூக ஒற்றுமை என ஒரு சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களிலும் ஜம்இய்யா அயராது அன்றும் இன்றும் பாரிய கரிசனையுடன் செயற்படுவதை நல்லுல்லங்கள் ஒரு போதும் மறுக்கவோ, மறக்கவோ மாட்டாது. 

இந்நாட்டு முஸ்லிம்கள் நாம் ஜம்இய்யாவை தீய சக்திகளின் நடவடிக்கைகளிருந்து பாதுகாப்பதுடன் அதன் சேவைகளுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க கடமைப்பட்டுள்ளேன். 

நாட்டில் ஏற்பட்ட அனைத்து  விதமான அசாதாரன சூழ்நிலைகளிலும் முஸ்லிம் சமூகத்திற்கு ஆன்மீக மற்றும் லவ்ஹீக ரீதியான வழிகாட்டல்களை வழங்குவதில் தாமதம் காட்டாது மிகதுனிச்சலகாக செயற்பட்டமையினாலே " "தலைக்கு வந்தது தலைபாகையுடன் போச்சு" என்பது போல் பெரும் இலப்புகளிருந்து எம் சமூகம் பாதுகாப்புடன் இருப்பதை காணமுடிகிறது. 

ஏன் தற்போது முலு உலகமே பயப்படக்கூடிய இந்த covid 19 வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள ஜம்இய்யா எடுத்த முயற்சிகள் எத்தனையோ, அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் பலர் ஆரம்பத்தில் கடுமையாக விமர்சித்தனர் பின்பு ஜம்இய்யாவை சரி கண்டனர். 

குறிப்பாக மஸ்ஜித்கள் ஐங்கால தொழுகை  மற்றும் ஜமுஆ மற்றும் இதர வணக்கங்களுக்கு  மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் என்று கூறியது தான் தாமதம் சில விஷம் கக்கும் அமைப்புகள் ஜம்இய்யாவுக்கு எதிராக கதைப்பதற்கு நல்ல தலைப்பு கிடைத்தது என நினைத்து "குரங்குட கைல பூ மால கிடைத்தது" போன்று தாறு மாறாக ஏசிபேசி விடியோக்களை வெளியிட்டன.

இவர்களின் விமர்சனம் சரிதான் என்று கூறி சில வழக்கறிஞர்களும் மடையனாகிய சந்தர்ப்பங்களைப் பார்தோம். 

ஆனால் என்ன நடந்தது ஒரு சில நாட்களில் விமர்சகர்கள் தங்கள் நிலைப்பாட்டினை மாற்றியது அவர்களின் சிறுபிள்ளைத்தனமான அறிவுக்கு சான்றாக அமைந்தது. 

அவ்வாறே இந்த வைரஸ் பாதிப்பினால் மரணமாகும் முஸ்லிமின் சடலம், இலங்கை சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக தகனம் செய்யப்படக்கூடாது, உலக சுகாதார திணைக்களம் கூறுவது போலும், 150 நாடுகளுக்கு மேலாக நடைமுறைப்படுத்தப்படுவருவதைப்போல் அடக்கம் செய்வதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள ஜம்இய்யாவின் தலைவர் எடுத்த முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் இந்த விமர்சகர்கள் மறைக்க முயற்சிக்கின்றனர்.

அடக்கம் செய்வதற்கு அனுமதி இருந்த நிலையிலோ ஆரம்ப முஸ்லிம் நபரின் ஜனாஸா ஏறிக்கப்பட்டது. 

இதற்கு முன்பதாகவோ ஜம்இய்யா  கொழும்பு மஸ்ஜித் சம்மோலங்களுக்கு அறிவித்து சுகாதார அமைச்சு ஆரம்பமாக வெளியிட்ட அறிக்கையின் படி அடக்கம் செய்வதாயின் கபுர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கமைய மையவாடிகளில் இயந்திரங்கள் மூலம் கபுர்களும் தோன்டி ஏனை அடக்க ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தது. 

ஆனால் ஜனாஸா எரிக்கப்பட்ட போவதாக  செய்திகள் கசைந்த போது இரவோடு  இரவாக ஜம்இய்யா மூத்த வைத்திய  நிபுணர்கள் சட்டத்தரணிகள் மற்றும் முன்னால் அமைச்சர்கள் என அனைவர்களுடனும் தொடர்பு கொண்டு தனது சக்திக்கு அற்பாட்பட்ட முயற்சிகள் செய்ததை நாம் அறிவோம். என்றாலும் எந்த முயற்சியும் பயணளிக்கவில்லை. 

இதற்கு பின்னரே இவ்வைரஸ் தாக்கத்தால் மரணமானால் தகனம் மாத்திரம் தான் செய்யமுடியும் என்பதாக சுகாதார அமைச்சு தங்கள் அறிக்கையை மாற்றி அமைத்தது. 

*இதன் பின்னர் ஜம்இய்யா காத்திரமான முயற்சிகளை செய்ய ஆரம்பித்தது.* அவை 

1. நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி, பிரதமர்,  மற்றும் கொரொனா கட்டுப்பாட்டு தலைமையகத்தில் அங்கம் வகிக்கும் இரானுவ தலபதி, சுகாதார அமைச்சர், மற்றும் டாக்டர் அனில் ஜெயசிங்க ஆகியோருக்கு  இந்த நிலைப்பாட்டை மாற்றி உலக சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரி கடிதங்களை ஜம்இய்யா அனுப்பிவைத்தது. இதற்கும் சிலர்  *"இது கோரிக்கை விடுக்கும் நேரமா"* என்று எழுதியும், பேசியும் விமர்சனம் செய்தனர். 

2.   முஸ்லிம்; முன்னால்  பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து இது குறித்து  ஆலோசனை செய்து முஸ்லிம்களுக்கு நல்லதோர் தீர்மானத்தை பெற்றுத் தரவேண்டும் என பாரிய முயற்சிகள் செய்தனர்.  அதன் விளைவாக கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்கள் முன்னால் இவ்விடயம்  வாத பிரதி வாதம் என எவ்வித சாதக முடிவிவும் கிடைக்கப்பெறாமல் முடிவடைந்து. 

3. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அவர்கள் இலங்கை இரானுவ தலபதி ஜெனரல் ஷவேந்ரா சில்வா அவர்களை நேரடியாக சந்தித்து முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய உரியவர்களுடன் ஆலோசனை செய்து அனுமதி பெற்றுத்தர உதவுமாறு வேண்டிக்கொண்டதை மரந்து விட்டமாட்டோம்.

4. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி  அவர்களை உத்துயோகபூர்வமாக  சந்தித்தது முஸ்லிம்களின் உணர்வை மதித்து, இஸ்லாமிய வழிகாட்டலுக்கு அமைவாக சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து இவ்வைரஸினால் மரணமாகும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய அனுமதி தருமாறு வேண்டியது மிக முக்கியமானதாகும். 

5. இஸ்லாமிய தலைசிறந்த வைத்திய நிபுனர்களுடன் தொடர்ப்பு கொண்டு இவ்வைரஸ் பாதிப்பினால் மரணிக்கும் ஒருவரின் உடலை அடக்கம் செய்வது சுகாதார விதிமுறைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது  என்பதை விஞ்ஞான  ரீதியாகவும், ஏனைய 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதை உணர்ச்சி ரீதியாகவும் ஆவனப்படுத்தி சுகாதார அமைச்சுக்கும், ஏனைய வைத்திய நிபுனர்களுக்கும் சமர்பித்து, இலங்கை நாட்டிலும் இதை அமுல் படுத்த ஆவனம் செய்து தருமாறு வேண்டியது  உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். 

இவ்வாறான பல முயற்சிகள் செய்யப்பட்டு சாதகமான முடிவுகள் காணல் நீராக மாறிய போதே ஜம்இய்யா தனது நிலைப்பாட்டில் மாற்றம் செய்து பகிரங்கமாக 07.05.2020 ஆம் திகதி டாக்டர் அணில் ஜயசிங்க - சுகாதார பணிப்பாளர்  நாயகம் அவர்களுக்கு தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும் எனவும், தற்போது நடைமுறையில் தகனம் மாத்திரம் தான் செய்யமுடியும் என்ற   சுகாதார வழிகாட்டல் முஸ்லிம் சமூகத்தை அதிருப்தி அளிப்பதாகவும், ஜம்இய்யாவின் தலைவர் உற்பட அனை நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கைப்பமிட்டு ஒரு கடிதத்தை அனுப்பியவைத்தனர். 

ஆனால் எங்கள் சமூகத்திலிருகும் இஸ்லாமிய விரோதிகளின் கைக்கூலிகள் ஜம்இய்யாவின் அனைத்து நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் மறைத்து; இறுதியாக வழங்கிய கடிதத்தை மாத்திரம் பார்த்து கடும் விமர்சனங்களை செய்ய ஆரம்பித்துள்ளதனர்.

  குறிப்பாக ஜம்இய்யாவின் தலைவர் அவர்களை கேளி சித்திரம் எனவும், இல்லாத பொல்லாத கதைகளை அவர்மீது தினித்து அவர்கள் UTV யில் பங்கேற்ற  நேர்காணல் நிகழ்சி ஒன்றின் கானொலியை முன் பின் என மாற்றங்கள் செய்து, ஜம்இய்யாவுக்கு அவப்பேர் ஏற்படும் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கண்டனத்துக்குரிய விடயமாகும். 

இந்த சிறந்த ரமழான் மாதத்திலும் இவ்வாரான கீழ்த்தரமான, நயவஞ்சக செயற்பாடுகளில் ஈடுபவர்கள் உறிய முறையில் பாவமன்னிப்பு தேடாவிடின் இந்த உலக வாழ்கையில் அல்லாஹ்வின் தண்டனைகளை அனுபவிப்பார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. 

ஜம்இய்யாவும் அதன் தலைவரும் இலங்கை நாட்டு முஸ்லிம்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் நிஃமத் ஆகும்.

அதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது எமது கடமையாகும். இல்லாவிட்டால் அவனுடைய   தன்டனையை எதிர் பார்க்கவேண்டும். 

அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாத்து அவனுக்கு விருப்பமான முறையில் எம்வாழ்வை அமைத்துக்கெள்ள அருள் புரிவானாக!

10 comments:

  1. மிகச்சிறந்த ஆக்கம்

    ReplyDelete
  2. I think it is high time that ACJU looked at the criticisms it receives from every quarter rather than issuing statements trying to justifying its stance.

    If a vote is taken among the Muslims in this country, I am sure, the ACJU will know where it stands and what is the respect it has in the community. The majority of the people doesn't have a good impression of it. This is a cardinal truth.

    Therefore, it is better, even at this stage, rather than being stubborn or adamant, a self-criticism is carried out by ACJU correct all the wrong-doings, and come forward as a respected and recognized authority.

    ReplyDelete
  3. ABU HABIB: ACJU அதை செய்தது, இதை செய்தது, என்று தம்பட்டம் அடிக்காமல், நீங்கள் உண்மையில் முஸ்லீம் மக்களுக்கு சேவை செயகின்ற இயக்கமாக இருந்தால், ACJU கும் பொதுமக்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏட்படுத்தி, அதில் மக்கள் கேக்கென்ற கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியுமா? வேண்டுமென்றால் இந்த நிகழ்ச்சியை UTV இல் நேரடியாக ஒளிபரப்பவும் முடியும்.

    மக்களின் சந்தேகங்களுக்கு பதில் கிடைத்துவிட்டால், அதன் பின் யாரும், யாரையம் விமர்சனம் செய்ய மாட்டார்கள்.

    ReplyDelete
  4. அல்லாஹ் ஜம்இய்யாவையும் அதன் சேவைகளையும் கபூல் செய்து தலைவர் உட்பட அனைத்து உலமாக்களையும் பாதுகாப்பானாக...

    ReplyDelete
  5. Reply to maqsblog ��

    You are the one who is saying that the mojority of people dont have a good impression on it , but we sont see any mojority other than you.
    If you need to know the sinsere services which are carried out by ACJU PLEASE FEEL FREE TO COME DOWN AND CONTACT THEM .

    ReplyDelete
  6. jamiyathul ulamave vimarsikkuredu yaraha irundaalum sari .awerhala adichu natta vittu veliye anuppanam

    ReplyDelete
  7. "The Muslim Voice" is happy that brother அபூ ஹபீப் has taken time to participate in the ongoing dialogue of the defaults of the ACJU and the life style of the hierachy of the ACJU in the present context of which much has been written in these colums/forum, Insha Allah. "The Muslim Voice" wishes to thank brother அபூ ஹபீப் for his views especially, if he is a member of the ACJU. As for "The Muslim Voice", the focus has been on the "deception" of the hierarchy who have failed the Sri Lanka Muslim community on the following which has "NOT" been still answered/responded to by the ACJU and brother Rizvi (Moulavi) Mufthi. If brother அபூ ஹபீப் has followed the content of the comments made by "The Muslim Voice" in this forum, brother அபூ ஹபீப் should have provided "clarity" at least to the following rather than "beat around the bush" with praise of a deceptive hoodwinking hierarchy.
    1. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka, "just for money". The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk powder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. IS THE ACJU/hierarchy NOT ANSWERABLE TO THIS, Insha Allah?
    2. The ACJU and Rizvi (Moulavi) Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -2015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.WHY?
    3. THE INDULGEMENT OF THE ACJU IN POLITICS WITHOUT CONFINING THEMSELVES TO ONLY RELIGIOUS MATTERS/GUIDANCE AND ACTIVITIES AND THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI (moulavi) TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. Have NOT the Muslim community faced the repercussions as it is? Are they not at fault. Lets face "REALITY" Insha Allah?
    Persons like brother அபூ ஹபீப் writing the above long article on the ACJU and it's leaders is like the what the minion Priests of the Temple of Ancient Egyptian Ruler Akhenaten, an Egyptian pharaoh who ruled during the Eighteenth Dynasty of the New Kingdom period of Ancient Egypt.
    The Muslims in Sri Lanka need a "CHANGE" to the Leadership of the ACJU and our Political institutions. THE ACJU NEEDS A NEW DILIGENT, HONEST AND TRUELY ISLAMIC RILIGOUSLY WAY OF LIVING LEADER, Insha Allah. So "The Muslim Voice" urge you to work towards that, Insha Allah.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

    ReplyDelete
  8. We are Muslims,but we hate ACJU leadership and their hypocratic way. They use carefully selectec quranic verses and hatheeth to strengthen their leadership among community. They never speak anything of qualities of. leadership and what is the punishment for the leaders who cheat community. They are calling themselves as ulama. I feel they study in an Arabic college for 8 years , it is enough for being called ulama. Muslims know who study at Arabic college and why. Only few people deserve to be called ulama. Brother Rizvi Mufthi has to resign. He is not fit given his record and approach.This my view and hope many will agree.

    ReplyDelete
  9. அனாதரவான சமூகத்துக்காக
    தங்களது சக்திக்கும் மீறி அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மையுடன் பாடுபடும் தலைவர்கள் மீது
    வீணான விமர்சனங்களை முன்வைப்பதிலிருந்தும்,
    காழ்ப்புணர்ச்சியை உமிழ்வதில் இருந்தும்
    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  10. உலமா சபை என்பதற்காக கண்மூடித்தனமாக நியாயப்படுத்தக் கூடாது. அவர்களிடம் இயக்கமும் இறுமாப்பும் ஏராளம்! உங்கள் தலைவர் சலாமுக்கு பதில் சொல்வதற்கும் தரம் பார்ப்பவர் என்பது அனுபவம்!!
    நடுநிலையாக கருத்துச் சொல்லுங்கள் வக்காலத்து வாங்க வேண்டாம்!!!

    ReplyDelete

Powered by Blogger.