Header Ads



கொரோனாவில் இருந்து குணமடைந்த 14 லட்சம் பேர்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, 40 லட்சத்து 36 ஆயிரத்து 128 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

கோப்பு படம்

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 லட்சத்து 58 ஆயிரத்து 843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 161 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தொற்று பரவியவர்களில் இதுவரை 14 லட்சத்து 460 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 2,23,749
ஸ்பெயின் - 1,73,157
இத்தாலி - 99,023
ரஷியா - 31,916
பிரான்ஸ் - 55,782
ஜெர்மனி - 1,43,300
பிரேசில் - 59,297
துருக்கி - 86,396
ஈரான் - 83,837
சீனா - 78,046
கனடா - 30,406
பெரு - 19,012
இந்தியா - 17,847
பெல்ஜியம் - 13,411
மெக்சிகோ - 20,314
சுவிஸ்சர்லாந்து - 26,100
சிலி - 12,160
அயர்லாந்து - 17,110
இஸ்ரேல் - 11,313
ஆஸ்திரியா - 13,928

No comments

Powered by Blogger.