Header Ads



அட்டுளுகம நெருக்கடி மகிந்தவும், பசிலும் நேரடித் தலையீடு - களத்தில் குதித்தார் பௌஸி

அட்டுளுகம விவகாரத்தில் எழுந்துள்ள மனிதாபிமன நெருக்கடி குறித்து, மூத்த அரசியல்வாதி பௌஸி பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை கையாளுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஸ விசேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய அட்ளுகம விவகாரம் குறித்து பசில் ராஜபக்ஸ, மூத்த அரசியல்வாதி  பௌசியிடம், தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார்.

அங்குள்ள நிலவரம், மக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை, தொடரும் ஊரடங்குச் சட்டத்தினால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பரிதாபம் என பலவற்றை பௌஸி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா  முஸ்லிம் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் அட்டுளுகம விவகாரம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இபோது புரிகிறதா கடந்த தேர்களில் வீராப்பு பேசிய தற்போதய அரசுக்கு ஆதரவாக இருந்த ஒரு சில நபர்கள் வாய் மூடி எங்கோ மூலையில் ஒழிந்து கொண்டார்கள்.

    ReplyDelete
  2. ஒரு கிழைமைக்கு முன் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.இனி நேரத்தை வீனடிக்காமல் அரசுக்கு முடியாவிட்டால் முஸ்லிம்கள் தேவையான பொருட்களை தருவார்கள் ஆனால் அதை அந்த மக்களுக்கு வழங்க இடமளிக்க வேண்டும்.அவர்கள் இலங்கை மக்கள்தான் ஆனால் முஸ்லிம்கள் என்பதால் பழிவாங்க கூடாது.

    ReplyDelete
  3. Let us not vituperative or provocative in our comments please.

    ReplyDelete

Powered by Blogger.