Header Ads



பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியவர்கள் தொடர்பிலான செய்தி அறிக்கையிடலின் போது அவர்களின் அந்தரங்க இறைமைக்கும் மதிப்பளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் கொரோனா நோய்த் தொற்றாளிகள் தொடர்பில் செய்திகளை வெளியிடும் போது இந்த விடயத்தில் சிரத்தை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக நோயாளி ஒருவரை சுகாதார தரப்பினர் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் போது அவர்களின் வீடு, உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள், காணொளிகள் என்பனவற்றை வெளியிடுவதனை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயளிகளை கண்டு பிடிப்பதற்காக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் செல்லும் போது அந்த காட்சிகளை சில தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் செய்தியாக அறிக்கையிட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்ப் பரவுகை தொடர்பில் மக்களை விழிப்புணர்வடையச் செய்ய ஊடகங்கள் வழங்கி வரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

எனினும், கொரோனா நோயாளிகள் தொடர்பிலான தகவல்களை ஊடகங்களில் அதிகளவில் அம்பலப்படுத்துவது நோய்த் தொற்று அறிகுறி உடையவர்கள் தாமக முன்வந்து விபரங்களை வெளியிடுவதற்கு அவர்களின் அந்தரங்க இறைமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு கொரோனா நோயாளிகள் தொடர்பில் ஊடகங்கள் செய்தி அறிக்கையிடும் போது சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது கடமைகளை முன்னெடுப்பதிலும் அசௌகரியங்கள் உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளார்.

தனிமைப் படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் கொரோனா நோய்த் தொற்றாளிகளை தேடிச் செல்லும் நடவடிக்கைகளில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபடும் போது அவர்களுடன் ஊடகவியலாளர்கள் செல்லத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் அந்தரங்க இறைமையைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களின் சுய பாதுகாப்பிற்கும் இது குந்தகத்தை ஏற்படுத்தக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம்...

    ReplyDelete
  2. பாதுகாப்புச் செயலாளரின் வேண்டுகோளை நாம் மனமாரப் பாராட்டுகின்றோம்.இந்த வேண்டுகோளை ஊடகத்துறை உற்பட ஏனையவர்களும் குறிப்பாக இணையத்தளங்களிலும் ஏனைய ஊடகங்கள் மூலம் செய்திகள வௌியிடுபவர்களும் இந்த வேண்டுகோளில் மிக முக்கிய கவனம் செலுத்துமாறு வேண்டிக் கொளகின்றோம்.

    ReplyDelete
  3. முதலில் அரச, அரச சார்பு ஊடகங்களை கட்டுப்படுத்தினால் இதெல்லாம் சரியாகும்।

    ReplyDelete
  4. When muslim area were handled,,, they left all the racist chennels to take video and broadcast. They should have stoped at that time..

    But now only they open their eyes....

    We trust in Allah alone for our safety.

    May Allah protect all the good people of this country and world from this covid virus and the harm of racist media.

    ReplyDelete
  5. ஊடகவியலாளர்கள் செல்லாவிட்டாலும் முகப்புத்தக நாயகர்கள் செல்வார்களே!

    ReplyDelete
  6. now only realized the fact and pain?

    ReplyDelete

Powered by Blogger.