Header Ads



‘இருமல் இருந்தால், ஏற வேண்டாம்’


கொவிட்-19இன் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்பதால், இருமல், காய்ச்சால் பாதிக்கப்பட்டோர், புகையிரதங்களில் பயணிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரவித்து ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் திலந்த பெர்ணான்டோ, 

பயணிகளின் பாவனைக்காக, 23 புகையிரதங்கள் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இவை, விசேடமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்காகவும் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்காவும் என, கொழும்பு மாவட்டத்துக்குச் செல்லும் மற்றைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்காகவே இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

எனவே, ரயில்லே நிலையத்துக்கு வருகை தருவோர், உகந்த ஆவணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் பருவக்காலச் சீட்டைக் கொண்டிருப்போர், இந்த மாதத்துக்கென்று புதுப்பிக்கத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். “

கடந்த மாத பருவகால சீட்டையே, இந்த மாதத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும் இதன் பிரகாரம், கண்டி, றம்புக்கனை, பொல்கஹாவெல, மஹோ, கனேவத்த, ராகமை, சிலாபம், புத்தளம், அவிசாவளை, கொஸ்கம, பெலியத்த, காலி, ஹிக்கடுவ, அளுத்கம ஆகிய நிலையங்களில் ரயில்கள் சேவையில் ஈடுபடும் என்று அவர் கூறினார்.

ரயில்களில் பயணக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும் என்றும் சுகாதார அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பயணிகள் பிற்பற்றுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு ரயில் பெட்டியில், 50 பயணிகள் மாத்திரம் பயணிக்க வேண்டும் என்றும் ரயிலில் பயணிக்கும்போது, வெளியில் எச்சில் துப்புவது, ரயில் நிலையத்தில் எச்சில் துப்புவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

எனவே, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்களில் யாசம் செய்தல் உள்ளிட்ட உணவுப்பொருள்களை விற்பனை செய்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.