Header Ads



முக்கிய தீர்மானத்தை மேற்கொள்ள, திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகிறது

தேர்தலை உரிய காலத்தில் நடத்துவது குறித்த முடிவை எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முக்கியமானதொரு கூட்டத்தை கூட்டுவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன்  பின்னர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல்கள் ஒத்திவைத்தன் காரணமாக  புதிய திகதியை தீர்மானிப்பதற்காக  ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தும் தேதியை தீர்மானிப்பதற்கான  முடிவு ஒன்றை எடுப்பதற்கு இந்த அவசர கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளார். 

அன்றைய கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு தரப்பின் உயர் பாதுகாப்பு உயர் மட்டத்தினர் சுகாதாரத்துறை உயர் மட்டத்தினர் பொது சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலருக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

அன்றைய தினத்தில் தேர்தலை இப்போது நடக்க முடியுமா  அல்லது எப்போது நடத்துவது இன்றேல் அதற்கான  மாற்று நடவடிக்கை என்ன என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தேர்தலை நடத்துவது மிக கடினமான காரியம் என்பதை அவர் பல தடவைகள் தெரிவித்திருக்கும் நிலையில் தேர்தல் உரிய தேதிக்குள் நடத்த முடியாது போனால் உச்ச நீதிமன்றத்தை நாடி உரிய தீர்வொன்றை பெற்றுக் கொள்ளவேண்டும் அதனைச் செய்ய வேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் அது அவசியமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கும் நிலையில் அடுத்து எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராய்வதற்காக இந்த அவசர கூட்டத்தை ககூட்டம் கூட்டப்படுகிறது.

இதற்கான அழைப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அன்றைய தினத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என்றும் தேர்தலை நடத்த முடியுமா அல்லது மாற்று நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் அன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை இந்த கூட்டத்தை அடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அவசரமாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து பேச இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எம். ஏ.எம நிலாம்

No comments

Powered by Blogger.