Header Ads



இலங்கை பொலிஸாரின், உயர்ந்த மனிதாபிமானம்


பொது மக்கள் சுகாதார பாதுகாப்புகளை பின்பற்றுகின்றார்களா என்பதனை பரிசோதிப்பதற்கு பொலிஸார் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ள வருகின்றனர்.

இந்நிலையில் வெல்லவாய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுவன் ஒருவரை நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெல்லவாய பிரதேசத்தில் முக கவசமின்றி சைக்கிள் ஓட்டிச் சென்ற சிறுவனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதன் போது முக கவசம் இல்லாத சிறுவனிடம் ஏன் முக கவசம் அணியவில்லை என வினவியுள்ளார்.

அதற்கு சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதன் போது தன்னுடைய சொந்த பணத்தை வழங்கிய பொலிஸ் அதிகாரி தற்போதே முக கவசம் ஒன்றை கொள்வனவு செய்து வருமாறு கூறியுள்ளார்.

வேண்டும் என்றால் இரண்டு முகக் கவசங்களை கொள்வனவு செய்துக் கொள்ளுமாறு குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய முகக் கவசம் பெற்றுக் கொண்ட சிறுவன் மிகுதி பணத்தை பொலிஸ் அதிகாரியிடம் வழங்கியுள்ளார். அதனையும் சிறுவனை வைத்துக் கொள்ளுமாறு கூறி அங்கிருந்து சிறுவனை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. Most of the people in all races are good and humanly except handfull numbers, that destroy the image of a nation.

    ReplyDelete
  2. இப்படி எத்தனையோ ஆயிரம் நிகழ்வுகள். எங்கட ஊரில் ஒரு சிங்கள பொலிஸ் அதிகாரி ஒரு முஸ்லிம் ஏழை வீட்டுக் கல்யாணத்தில் அதற்கான செலவுகளில் தானும் பெரும் பங்கு கொண்டு ஆற்றிய நற்சேவைகள் பலவும் உண்டு.

    ReplyDelete

Powered by Blogger.