Header Ads



கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததாக ஜேர்மனி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஜேர்மனி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த நோயை இப்போது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அந்நாட்டி சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஜேர்மனி இருந்தாலும், உயிரிழப்புகளை ஜேர்மனி தடுத்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அங்கு தற்போது வரை ஒரு லட்சத்து 30-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000-க்கும் மேற்பட்டோர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

இதே போன்று பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு உயிரிழப்புகள் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ஜேர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல இந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களைவிட, இதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஊரடங்கு வெற்றிகரமாக இருப்பதை அறியமுடிவதாக ஜென்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஜேர்மனி மக்கள் நிம்மதி அடைவதுடன், இது ஒரு மகிழ்ச்சி தரும் தகவலாக இருப்பதாக கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.