Header Ads



நமது குடும்பத்தில் யாராவது கொரோனாவினால், மரணித்தால் புகைப்படங்களை பகிர்வோமா..?


கொரோனா தொற்று ஏற்பட்ட "மரியோ ஹேமால் சில்வா" ஏப்ரல் 2ம் மிக்சி மரணித்து விட..,  அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு IDH. வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு மார்ச் 31 ம் திகதி வீடு திரும்புகிறார். 

மரணித்த ஹேமலால் அவர்களின் புகைப்படத்தை பதிந்து இரங்கல் பதிவு, மரணித்தவரின் புகைப்படங்களை WhatsApp மூலமாக குழுமங்களுக்கு அனுப்பி, செய்தி தளங்களில் பகிரந்ததை யாராவது கண்டீர்களா? எங்காவது WhatsApp Group களிற்கு வந்ததா அந்த தகவல் ? 

..........................
⛔ கொரோனா தொற்று ஏற்பட்டு இன்று 7வதாக மரணித்தவரின் புகைப்படத்தை இட்டு எத்தனை இரங்கல் பதிவுகள்/ எத்தனை WhatsApp தகவல்கள் ! 

1.ஏன் புகைப்படத்தை பகிர்கிறீர்கள்? 

2.என்ன கிடைக்க போகிறது ? 

3.உங்கள் குடும்பத்தில் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்ததால் இதை போல் தான் பகிரப்போகிறீர்களா? 

4.நீங்கள் பதியும் இந்த புகைப்படம் பல ஆண்டுகளாக WhatsApp மூலம் பரவப்போகின்றதை யோசித்தீர்களா? 

5. இதையும் விட சொல்வது என்றால், சிங்கள/ஹிந்து/கிறிஸ்தவ மக்கள் யாராவது கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்ததால் புகைப்படமோ, அவர் பற்றிய எந்த மேலதிக விபரங்களை வந்து சேராது. 

ஏன் முஸ்லிம் ஒருவர் மரணித்ததால் புகைப்படம்/வீட்ட முகவரி /குழந்தைகளின் புகைப்படம்/ என பல விடயங்களை நீங்களே பகிர்கிறீர்கள். !
அப்படி என்னதான் கிடைக்கிறது ? 

எதற்காக இந்த ஆர்வம்...? 

இதே போல், நீங்களும் மரணித்ததால் உங்களது புகைப்படத்தையும் இப்படி பகிர்ந்து, பல வருடங்களுக்கு பிறகும் உங்களது மனைவிக்கோ, உங்களது குழந்தைகளுக்கோ WhatsApp/ FaceBook மூலமாக காண நேர்ந்தால் அந்த ஒரு நிமிடம் எப்படி இருக்கும் ? அதை பற்றி ஒரு நிமிடம் சிந்தித்தீர்களா? 

இதே மரணம் நாளை என்னையும்/ உங்களையும் துரத்தும்! இறைவனை அஞ்சிகுகொள்ளுங்கள். ! 

பட்டுத்தான் திருந்த வேண்டும் என இறைவன் எழுதியிருந்தால் பட்டுத்தானே ஆக வேண்டும் ! 

ஒன்று மட்டும் இறுதியாக சொல்ல முடியும் 

கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தவர்களை இன ரீதியாக பார்த்து என் இனம், என் மதம் என்றால் மாத்திரம் இரங்கல் பதிவு எழுதி/ அது பற்றி மட்டும் கவலைபடுகிறானா அவன் தான் முதல் இனவாதி ! 

கொரோனா தொற்று ஏற்பட்டு 7வதாக மரணித்த இலங்கையரின் சகல பாவங்களும் மண்ணிக்கப்பட்டு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலான சுவர்க்கத்தை வழங்க இறைவனை பிரார்த்திக்கிறேன். ! 

Azeem Jahfer

2 comments:

  1. குடும்பத்தினரே முழுத் தகவல்களையும் வழங்கும் போது அடுத்தவர்கல் பகிர்வது வாடிக்கையாகி விட்டது.எனவே யாராவது மரனித்தால் முதலில் அவரின் குடுப்பத்தினர்,நண்பர்கள் அவரின் முழு விபரத்தையும் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.