Header Ads



புனித றமழானை முன்னிட்டு 30 டொன் பேரீச்சம்பழம் விநியோகம


புனித றமழானை முன்னிட்டு 30 டொன் பேரீச்சம்பழம் விநியோகம் நாடு பூராகவும் வழங்கி வைக்கப்பட்டது.

பறகஹதெனிய ஜே. ஏ. எஸ். எம். நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித றமழானை முன்னிட்டு சவூதி அரேபியா நாட்டினால் வழங்கப்பட்ட 30 டொன் பேரீச்சம்பழம் விநியோகம் நாடெங்கும் விநியோகிக்கப்பட்டது.

ஜே. ஏ. எஸ். எம். நிறுவனத்தின் தலைவர் மௌலவி என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனியின் வழிகாட்டலுடன் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான தலைமையில் இந்தப் பேரீச்சம் பழம் விநியோகம் நிறுவனத்தின் தலைமையகமான பறகஹதெனியவில் இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு ,மத்திய. மேல், சப்ரகமுவ, வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

விசேடமாக கிழக்கு மாகாணத்திற்கு பெருந்தொகையிலான பேரீச்சம் பழப் பெட்டிகள் அங்கு வருகை தந்த லொரிகள் மூலமாக  அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் கலாநிதி அம்ஜத் ராசிக்,  ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணியாளர் நாளிர், ஆசிரியர் பாரி மற்றும் நிறுவனத்தின்  உத்தியோகஸ்தர்கள் என முதலியவர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இக்பால் அலி





No comments

Powered by Blogger.