Header Ads



கொரோனா பற்றி உத்தியோகபூர்வ தகவல்களை மட்டும் நம்புங்கள்: பொலிஸ்

கொரோனா வைரஸ் பரவி வருவது சம்பந்தமாக உத்தியோகபூர்வமாக வெளியிடும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல், நோயாளிகளின் எண்ணிக்கை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆகிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க அல்லது கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணிக்குழு ஆகிய தரப்பினர் மாத்திரமே உத்தியோகபூர்வமாக வெளியிடுவார்கள்.

அந்த தகவல்களை மாத்திரமே மக்கள் நம்ப வேண்டும். வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் சரியான மற்றும் நம்பிக்கையான தகவல்களாக இருக்காது.

பொய்யான தகவல்களை பரப்புவது குற்றவியல் தண்டனை சட்டத்தில் தண்டனை பெறக்கூடிய குற்றம் எனவும் மக்களுக்கு அறிய தருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.