Header Ads



கொரோனாவின் அகோரம் - வீட்டிலிருந்தும் மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்காத தந்தை - மனதை நெகிழவைத்த (காணொளி)

சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதால் தனது மகளின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாத தந்தை தொடர்பான செய்தி அவிசாவளை - எஸ்வத்தை பகுதியில் பதிவாகியுள்ளது.

சுற்றுலா பேருந்து சாரதியான குறித்த நபரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கடந்த 24 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்மைய அவரின் வீட்டுக்கு அருகில் அவருக்கு சொந்தமான மேலும் ஒரு வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த நபரின் மூத்த மகள் நோய் நிலைமையால் திடீரென உயிரிழந்துள்ளார்.

எனினும் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் தனது மகளின் இறுதி கிரியையிலும் பங்கேற்கவில்லை.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வெளிநாடு சென்று நாடு திரும்பியவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள போதும் பலர் அதனை இன்னும் பின்பற்றவில்லை.

இந்த நிலையில் தனது மகளின் இறுதி சடங்கிலும் பங்கேற்காது சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி அதிகாரிகளின் பணிப்புரையை பிற்பற்றியுள்ள குறித்த தந்தை எமது நாட்டுக்கே முன் உதாரணமாக அமைந்துள்ளார்.

தாம் தமது சொந்த மகளின் இறுக்கிரிகையையும் புறக்கணித்தமையானது, நாட்டின் நலனுக்காக செய்யவேண்டிய கடமையாக கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. He was the first SriLankan Person/Sinhalese bought down Crona Virus to Srilanka. Italy and Korean Srilankans are responsible for the spreading the Virus in SriLanka.

    ReplyDelete
  2. He was the first SriLankan Person/Sinhalese bought down Crona Virus to Srilanka. Italy and Korean Srilankans are responsible for the spreading the Virus in SriLanka.

    ReplyDelete

Powered by Blogger.