Header Ads



கொரோனா ஆபத்தான நிலையை எட்டாததால், தேவாலயங்களில் ஆராதனைகளை நிறுத்த அவசியம் இல்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் ஆபத்தான நிலையை எட்டாததால் தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நடத்துவதை நிறுத்த  வேண்டிய அவசியம் இல்லையென கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

"இக்காலக்கட்டத்தில்  ஞாயிறு ஆராதனைகளை நிறுத்துமாறு தேவாலயங்களைக் கேட்டு நாங்கள் அதிக பீதியை உருவாக்க விரும்பவில்லை" என்று கொழும்பு பேராயரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், "வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கான தனது முடிவை அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே மக்கள் மத்தியில் அதிக அச்சத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை" என்று அவர் கூறியுள்ளார். 

கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கத்தோலிக்க பாடசாலைகளின் அதிபர்களுக்கு மறைமாவட்டம் அறிவுறுத்தியிருந்த நிலையில், நேற்று முதல் கத்தோலிக்க பாடசாலைகள் மூடப்பட்டடுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.