Header Ads



சீனாவில் இருந்து பொருட்கள், இறக்குமதி செய்வது எச்சரிக்கைக்குரியதாகும்

 சீனாவில் இருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட முகக் கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

   கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட 10 ஆயிரத்து 400 முகக் கவசங்கள் கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

   தற்போதைய நிலையில் இவ்வாறான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது எச்சரிக்கைக்குரியதாகும்.

   வைரஸ் தொற்று குறித்த இந்தத் தீவிரமான நிலையில் இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வைத்திய ஆய்வு நிறுவனத்தின் அனுமதி பெறாமை குற்றமெனவும், அதிகார சபையின் விற்பனை மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்த வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   கூடிய விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும், சுகாதாரப் பாதுகாப்பற்ற முகக் கவசங்களை விற்பனை செய்யும் நிலையங்களையும் கண்டுபிடிக்க, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments

Powered by Blogger.