Header Ads



மைத்திரிக்கு எதிராக வழக்கு

அதாவது பொலிஸ்மா அதிபரை சட்டத்துக்கு முரணாகவும் அரசியல் யாப்புக்கு முரணாகவும் கைது செய்து, கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக சர்வதேச அமைப்பொன்று அறிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களுக்குள் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பானது இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி பல்வேறு அரசியல் காரணங்களினால் அசாதாரணத்துக்கு உட்படுத்தப்பட்டு, பொலிஸ் சேவையில் இருந்து விலகி சென்று வெளிநாடுகளில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அதிகமானோரோ உள்வாங்கி உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

பிரித்தானியாவை கேந்திரமாக கொண்டிருக்கும் இந்த அமைப்பானது சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் அவுஸ்ரேலியா ஜப்பான், இத்தாலி ஆகிய பல்வேறு நாடுகளிலும் செயற்பட்டு வருகின்ற அமைப்பாகும்.

அதன் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் பொலிஸ் பரிசோதகரும் தற்போது பிரித்தானியாவில் வசிப்பவருமான அஜித் தர்மபால கூறியதாவது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தினை மீறி, சட்டம் மற்றும் நீதி அமைச்சை தன்னிடம் வைத்துக்கொண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொறுப்பு கூற வேண்டுமென கூறி கைது செய்து கடூழிய சிறைத்தண்டனைக்கு உட்பட்டுத்தியமை சட்டத்துக்கு முரணான விடயாகும்.

மேலும் குறித்த செயற்பாடானது பொலிஸ் திணைக்களத்துக்கு செய்யும் அவமானம். இதற்கு முன்னர் சேந்தியா, சூடான் ஆகிய நாடுகளில் பொலிஸ்மா அதிபர்களை விசாரணைக்கு உட்படுத்தி இருந்தாலும் உலகில் எந்ததொரு நாட்டிலும் பொலிஸ்மா அதிபர்களை கைது செய்து தண்டிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Go ahead Please someone come out and put this Musalaya/මූසලයා inside bars.
    Culprit Farmer President..

    ReplyDelete

Powered by Blogger.