Header Ads



உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது, பிரதமர் மஹிந்த

“இலங்கைக்கு என்று இறைமை இருக்கின்றது. கொள்கை இருக்கின்றது. சட்ட வரையறைகள் இருக்கின்றன. அரசமைப்பு இருக்கின்றது. இவையெல்லாவற்றையும் மீறி உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடவே முடியாது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான எமது நிலைப்பாடுகளில் எந்த மாற்றமும் கிடையாது. இதை ஐ.நாவும் சர்வதேச நாடுகளும் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும்."

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் போராடி கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் ஐ.நா. தீர்மானங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும்போது அதற்கு நாம் எவ்வாறு இணை அனுசரணை வழங்குவது?

அதனால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து நாம் வெளியேறியுள்ளோம் என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

உள்நாட்டுக்குள் பொறிமுறை ஒன்றை உருவாக்கித்தான் பொறுப்புக்கூறல் கடமையை எம்மால் செய்ய முடியும் என்பதையும், சர்வதேசத்தின் பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்கவே மாட்டோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்" - என்றார்.

2 comments:

  1. நாடு எங்கே செல்கிறது? இந்த அரசியல் மந்திகளின் நிலைப்பாடும் இந்த நாட்டு மக்களின் நிலைப்பாடும் ஒன்றா? திறைசேரி காலி. எடுத்த கடனை திருப்பிச் செலுத்த முடியாது. காலக்கெடு தேவை என உலக அரங்கில் தெரிவிப்பு. ஏனைய நாடுகள் இலங்கைக்கு கடன் கொடுக்கத் தயக்கம்.நாட்டின் பொருட்களின் விலை பயங்கரமாக உயர்வு. ஏற்றுமதி நோக்கிலான தேசிய உற்பத்தியில் வீழ்ச்சி. பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பல்வேறு சேவைகளுக்குப் பணம் செலுத்த பணம் இல்லை. இவை உற்பட உள்நாட்டில் ஆயிரமாயிரம் பிரச்னைகள். எல்லாவற்றுக்கும் மேலான கொரோன வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி பல்வேறு துறைகளில் இலங்கையைத் தாக்கும் அறிகுறிகள். இவ்வளவுக்கும் மத்தியில் நாட்டு மக்களை மூன்று வேளை இல்லாவிட்டாலும் இரண்டு வேளைகளாவது சாப்பிடுவதற்கு வசதி செய்து கொடுக்க முடியாத அரசாங்கம் பேசும் வீராப்பு, எங்கள் நாட்டு இறைமையில் யாரும் கைவைக்க முடியாது.

    ReplyDelete
  2. தமிழர்களது போராட்டங்களை அடக்க வெளிநாடுகளை தலையிட சொன்னதே நீங்கதானே. இலங்கையை அடைவு வைக்க முன்னம் இந்த ஞானம் ரோசம் வந்திருக்க வேணும். எங்களுக்கு ஒரு இரச்சியமும் அரசர்களும் இருந்தார்கள் என்கிற நினைபுள்ள இனங்களை உள்வாங்காமல் இறமையின் முழுமைபற்றி பேச முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.