Header Ads



ரணிலை பழிவாங்கவே ஜனாதிபதி தேர்தல் தோல்வியின்பின் பொதுஜன பெரமுனவிற்கு அரசாங்கத்தைக் கையளித்தனர்.

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தொடர்பில் அறிந்திருக்காமையினாலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பழிவாங்கும் நோக்கத்திலுமே ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தொடர்ந்து  பொதுஜன பெரமுனவிற்கு அரசாங்கத்தைக் கையளித்தனர். 

இது அரசியலமைப்பிற்கு முரணானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

இதற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரின் தவறுகளே மூலக் காரணமாகும். அத்தோடு எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்த  மஹிந்த  ராஜபக்ஷவை இடைக்கால அரசாங்கத்தின்  பிரதமராக    நியமிக்கும்  அதிகாரம் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிற்கு  கிடையாது என்றும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.        

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.