Header Ads



பொதுத்தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்தும் சிக்கல்

பொதுத்தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்தும் சிக்கல் நிலவுகின்றது.

இந்த நிலையில், சஜித் பிரேமதாச தலைமையிலான முன்னணியை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்று 11ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக் கோரலுக்கு தயாராகி வருவதாகக் கூறினார்.

முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, வேட்புமனு குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின்போது அந்த அனைத்து விடயங்களுக்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டாலும் இம்முறை பொதுத்தேர்தலில் ஐக்கிய சேதியக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என தௌிவாகக் கூறப்பட்டது. இதற்கு முன்னரும் நாம் பல்வேறு முன்னணிகளை உருவாக்கினாலும் யானை சின்னத்திலேயே போட்டியிட்டோம். சட்ட வல்லுனர்கள் கட்சியின் யாப்பு ரீதியிலான விடயங்களை சுட்டிக்காட்டினர். யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு யாப்பிற்கு அமைய செயற்பட வேண்டும். சட்ட ரீதியில் பிரச்சினை உள்ளது. நான் அறிந்த வரையில், யானை சின்னத்தை வேறு யாருக்கும் எம்மால் வழங்க முடியாது

என அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், யானையை செயற்குழுவே வழிநடத்தும் எனவும் வேட்புமனு குழுவை செயற்குழு நியமிக்கும் எனவும் குறிப்பிட்ட அகிலவிராஜ், அதற்கு பெரும்பான்மை இணக்கப்பாடு தேவை எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ‘அபே ஜாதிக்க பெரமுன’ என்ற பெயரில் இருந்த அரசியல் கட்சியை ‘ஜாதிக்க சமகி பலவேகய’ என பெயர் மாற்றம் செய்வதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவையும் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

1 comment:

  1. இந்தக் கட்சியின் எல்லா உறுப்பினர்களையும் அசுத்தவாழியில் போடவேண்டிய தருணம் வந்துவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.