Header Ads



ஜனாதிபதி கோட்டாபய சிறந்த நிர்வாகி, அலிசாஹீர் புகழாரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டிருக்காது விட்டாலும் அவர் சிறந்த நிர்வாகி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேவேளை வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தென் பகுதி என பிரிந்து செயற்படாமல் நாட்டில் வாழும் அனைவரும் சமமானவர்கள் என்ற அடிப்படையில் செயற்படும் பட்சத்திலேயே நாடு நிலையான அபிவிருத்தியை அடையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் 72 ஆவது சுதந்திர தினத்தையிட்டு மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுதந்திர தின நிகழ்வு வாவிக்கரை பொது மைதானத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன் தலைமையில் 'பாதுகாப்பான தேசம் - செழிப்பான நாடு" எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா தேசியக்கொடி ஏற்றபட்டதையடுத்து முஸ்லிம் பாடசாலை மாணவிகள் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை இசைத்தனர்.

இவ்வாண்டிற்கான சுதந்திர தினத்தையொட்டி பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவினால் நடாத்தப்பட்ட வாசிப்பு, அரபு எழுத்தணி மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இதனையடுத்து இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா உரையாற்றினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.