Header Ads



ஹஜ் ஏற்பாடுகளுக்கு 35 முகவர்களுக்கே அனுமதி, சேவையிலிருந்து நீக்கப்படவுள்ள முகவர் விபரங்கள் வெளியிடப்படும்

2020 ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 35 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கே அனு­ம­திப்­பத்­திரம் வழங்­க­வுள்­ளது. அரச ஹஜ் குழு முன்­னெ­டுத்­துள்ள மூன்று பிரி­வு­க­ளி­லான ஹஜ் பொதிகளுக்கு (Package) குறிப்­பிட்ட கட்­ட­ணத்தில் இணக்கம் தெரி­விக்கும் ஹஜ் முகவர் நிலை­யங்­களே இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

கடந்த வருடம் 50 கோட்­டாவும் அதற்கு மேலும் பெற்று ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்த ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு மாத்­தி­ரமே இவ்­வ­ருடம் அனு­மதிப் பத்­திரம் வழங்­கப்­படும். அத்­தோடு ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்த ஹஜ் குழு­வினால் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக அவர்கள் இருக்­கக்­கூ­டாது எனவும் அவர் கூறினார். தற்­போது இயங்­கி­வரும் இரு ஹஜ் முக­வர்கள் சங்க பிர­தி­நி­திகள் மற்றும் அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள் தீர்க்­க­மான முடி­வினை அறி­விக்­காத நிலை­யி­லேயே அவரால் இந்தத் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இன்னும் ஓரிரு தினங்­களில் 35 ஹஜ் முகவர் நிலை­யங்கள் தெரிவு செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்டு கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­படும். அவர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அரச ஹஜ் குழு வழங்­கி­யுள்ள நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பவர் களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வருடம் ஹஜ் ஏற்­பா­டு­களில் மோசடி– ஊழல்கள் புரிந்­த­வர்கள் ஹஜ் விசா­ரணைக் குழு­வினால் விசா­ரிக்­கப்­பட்டு அந்த அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்கையை நாம் ஆராய்ந்து வருகிறோம். அந்த அறிக்கையின்படி சேவையிலிருந்தும் நீக்கப்படவுள்ள ஹஜ் முகவர் நிலையங்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

No comments

Powered by Blogger.