Header Ads



நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட 33 மாணவர்களும் சிறந்த உடல் நலத்துடன் உள்ளனர்

வுஹான் நகரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட 33 மாணவர்களும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

சுகாதார அமைச்சில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

´சீனாவும் இலங்கையும் மிகுந்த நட்புறவுடன் செயற்பட்டு வரும் இரு நாடுகளாகும். அவ்வாறு ஒருவருக்கொருவர் நட்புடன் செயற்படுவதன் காரணமாகவே உலகில் நான்காவது நாடாக எமது பிள்ளைகளை வுஹானில் இருந்து அழைத்துவர முடிந்தது. 

ஆகவே சீனா எம்மீது காட்டும் விசுவாசத்தை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிற்கு உற்படுத்த கூடாது. 

இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்கள் கடும் பிரயத்தனத்தை எடுத்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் சீனாவை உதாசினப்படுத்துவது உகந்ததல்ல. ஆகவே நாம் தொடர்ந்தும் சீனாவுடன் நட்புடன் செயற்பட வேண்டும். 

வஹான் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

விமானத்தில் பறக்கும் போது ஏற்படும் தடிமன் கூட அவர்களுக்கு இல்லை. 

ஆகவே இந்த மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான எந்தவித நோய் அறிகுறியும் இல்லை´.

No comments

Powered by Blogger.