Header Ads



250 முஸ்லிம் குடும்­பங்கள் தமது பள்ளிவாசலை இழந்துள்ளன, மஹர பள்­ளி­வாசல் தலைவர்

மஹர தேர்தல் தொகு­தியில் ராக­மையில் அமைந்­துள்ள மஹர சிறைச்­சாலை வளா­கத்தில் 100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக இயங்கி வந்த ஜும்ஆ பள்­ளி­வாசல் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ளதுடன், பள்­ளி­வாசல் கட்­டடம் புன­ர­மைக்­கப்­பட்டு கடந்த 5 ஆம் திகதி அங்கு புத்தர் சிலை­யொன்றும் நிறு­வப்­பட்­டுள்­ளது.  இதனால் இப்­ப­கு­தியில் வாழும் சுமார் 250 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் குடும்­பங்கள் தமது பள்ளிவாசலை இழந்துள்ளதாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரி­வித்தார்.

1967 ஆம் ஆண்டில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள இப்­பள்­ளி­வாசல் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் கீழ் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்டு அங்கு புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­மைக்கு முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ, பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகி­யோ­ருக்கு முறை­யிட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் தெரி­வித்தார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மஹர சிறைச்­சாலை அதி­கா­ரிகள் மக்­க­ளுக்கு இப்­பள்­ளி­வா­சலைத் தடை செய்­தனர்.

பாது­காப்பு காரணம் கருதி பள்­ளி­வா­சலைப் பயன்­ப­டுத்­து­வது தடை செய்­யப்­பட்­டது. பள்­ளி­வா­சலை சுத்தம் செய்­வ­தற்கோ அங்­கி­ருக்கும் பொருட்­களை உப­யோ­கப்­ப­டுத்­து­வ­தற்கோ சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளினால் தடை விதிக்­கப்­பட்­டது. ராகமை பகு­தியின் ஜனா­ஸாக்­க­ளுக்கு பள்­ளி­வா­சலில் இருக்கும் சந்தூக்கு மற்றும் ஜனாஸா குளிப்­பாட்டும் கட்டில் என்­ப­ன­வற்­றைப் பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த தள­பா­டங்கள் ஜனா­ஸாக்­க­ளுக்­காக மாபோலை பள்­ளி­வா­ச­லி­லி­ருந்தே பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டன. ஜனாஸா தொழு­கைகள் கூட மைய­வா­டிக்கு அரு­கி­லி­ருக்கும் பழைய வீட்­டிலே தொழு­விக்­கப்­பட்­டது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு அப்­போ­தைய அர­சாங்க காலத்தில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் குறித்து அப்­போ­தைய அமைச்சர் ஹலீம், வக்­பு­சபைத் தலைவர், நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வந்­தன. இந்­த­நி­லையில் இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்பு பள்­ளி­வாசல் ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ள­துடன் புத்தர் சிலையும் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பள்­ளி­வாசல் தலைவர் தெரி­வித்தார்.

இதேவேளை, நீண்­ட­கா­ல­மாக கைவி­டப்­பட்­டி­ருந்த பள்­ளி­வாசல் மஹர சிறைச்­சாலை அதி­காரி சந்­தன வீர­சிங்­கவின் ஆலோ­ச­னைக்­க­மைய திருத்­தி­ய­மைக்­கப்­பட்டு இது­வரை காலம் சிறைச்­சா­லைக்கு குறை­பா­டாக இருந்த ஓய்வு விடு­தி­யாக மாற்­றப்­பட்­டுள்­ள­தாக மஹர சிறைச்சாலையின் உத்தியோகபூர்வ முகநூலில் புகைப்படங்களுடன் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்­வி­காரம் தொடர்பில் தெவட்­ட­கஹ பள்­ளி­வா­சலின் தலைவர் ரியாஸ் சாலி, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிரதி செய­லாளர் எம்.எஸ்.எம்.தாஸிம் மெள­லவி ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்தப் பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகை, தராவிஹ் தொழுகை மற்றும் விஷேட நிகழ்வுகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மற்றும் அஹதியா பாடசாலையும் இடம்பெற்று வந்ததாக பள்ளிவாசல் தலைவர் தெரிவித்தார்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

4 comments:

  1. Muslimgalin srilanka thalaivar....Sabri saahib and co...Where r you guys...?
    Or this is also drama for election like Saithamaruthu???

    ReplyDelete
  2. இப்பதான் சிங்களவன் பயன்படுத்துறான். இவ்வளவு காலமும் பள்ளிவாசல் நிருவாகம் மயிர் புடுங்கிட்டா இருந்தீங்க. இதை பயன்படுத்த சரியா முயற்சி செஞ்சீங்களா

    ReplyDelete
  3. R.HAKEEM,RISARD,MARIKKAR,
    FOUZI,M RAHMAN, IVANUVAL
    ITHUKAALVARAIKUM
    THOONGIKONADA IRUNDAANUVAL.

    ReplyDelete

Powered by Blogger.