Header Ads



இறங்கி வருகிறார் ரணில்..? விசேட அறிவிப்பு விரைவில்...!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் அது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விரைவில் வெளியிட கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக அறியமுடிந்தது.

அதேசமயம் கட்சியின் தலைமைப் பொறுப்பை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைத்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவராக சஜித்தும் ஆலோசகராக ரணிலும் செயற்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இப்போதுள்ள நிலைமையில் பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தாலும் மாகாண சபைத் தேர்தலிலாவது குறிப்பிட்ட சில மாகாண சபைகளை தக்க வைப்பதாயின் கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் செய்யவேண்டுமென பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதையடுத்து தனது இறுக்கமான நிலைப்பாட்டினை ரணில் தளர்த்தியிருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் நியமனங்களை இறுதி செய்த பின்னர் கட்சித் தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பது பற்றியும் ரணில் ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டது.நெருக்கமான தனது சகாக்களுக்கு தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்கும் விடயத்தில் சஜித் தரப்பு இழுத்தடிப்பு செய்யலாமென கருதுவதால் ரணில் இவ்வாறு ஆலோசனை நடத்துவதாக சொல்லப்பட்டது.

இதேவேளை இவ்வாரத்திற்குள் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து ரணில் நீங்காவிட்டால் புதிய அரசியல் கூட்டணியை முன்னெடுப்பதென்று சஜித் தரப்பு உறுதியாக தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிந்தது.

-Sivarajah-

No comments

Powered by Blogger.