Header Ads



ஈரான், ஈராக்கில் விமானங்கள் பறக்காது - அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் நடத்திய ராக்கெட் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் குறிப்பிட்ட வான்வெளியில் பறக்க அமெரிக்க விமாங்களுக்கு அவசரகால தடை விதிப்பதாக அந்நாட்டு மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்தது.

இந்நிலையில், சுலைமானி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகிவில்லை.

ஈரான் தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், ஈராக், ஈரான் மீது அமெரிக்க விமானங்கள் பறக்க அந்நாட்டு விமான போக்குவரத்து நிர்வாகம் அவசரகால தடை விதித்துள்ளது.

ஈராக்கில் அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பின்னர் ஈராக், ஈரான், ஓமான் வளைகுடா மற்றும் ஈரான்-சவுதி அரேபியா இடையேயான நீர்நிலைகள் வான்வெளியில் அமெரிக்க விமானங்கள் இயங்குவதை தடை செய்வதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.