Header Ads



ஷாருக்கானுக்கு ஹெலஉருமய குண்டுவைத்ததாக, ரஞ்சன் கூறிய விவகாரத்தின் உபகதை இதோ..!

நேற்றைய தினம் 21.01.2020  பாராளுமன்றத்தில் அம்பூட்டுப்பேரையும் ச்சும்மா கிழிகிழி என கிழித்து தொங்க விட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் உரையில் ஹெல உருமய ஷாருக் கானுக்கு குண்டு வைத்த கதையென்கிற உபகதையொன்றும் இடம்பெற்றிருந்தது.

அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணி இதுதான்:

கி.பி. 1948 – 2003 காலப்பகுதியில் ‘கங்கொடவில சோம, கங்கொடவில சோம’ என்று வல்லிய தேரரொருவர் வாழ்ந்து வந்தார். தனது தத்துவப்புலமை காரணமாக சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்த அன்னார் ருஷ்ய தேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை 2003 டிசம்பர் 12ஆம் திகதி செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வைத்து மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவரது முதலாவது சிரார்த்த தினம் அனுஷ்டிக்கப்படவிருந்த 2004 டிசம்பர் 12ஆம் திகதிக்கு முந்தைய நாள் - அதாவது, டிசம்பர் 11ஆம் திகதி - கொழும்பில் நடைபெற்ற Temptation 2004 களியாட்ட நிகழ்வுக்கு இந்திய பாலிவுட் உச்ச நட்சத்திரம் ஷாருக் கான் உள்ளிட்ட திரையுலகத் தாரகைகள் வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வை ஆரம்பம் முதலே எதிர்த்த கடும்போக்கு பௌத்தம் பேசும் ஹெல உருமய கட்சி ‘சோம தேரருக்கு திவசம் கொடுக்கும் சமயத்தில் சோமாறிகளுக்கு கூத்து கேட்குதா?’ என்று தொனிக்க ஆர்ப்பாட்டமெல்லாம் நடாத்தினார்கள்.

எதிர்ப்புக்கு மத்தியிலும் Temptation 2004 நிகழ்வை நடத்தியே தீருவது என ஏற்பாட்டாளர்கள் விடாப்பிடியாக இருந்தனர். (சரிதான். அந்நாட்களில் பிரபலமாக இருந்த ஓர் ஐஸ்க்ரீம் விளம்பத்தில் ‘Temptation என்றால் அடக்க முடியாத ஆசை’ எனக் கேட்டதாய் நினைவு. 😋)

மேற்படி கலைநிகழ்ச்சி விமரிசையாக ந டை பெ ற் று க் கொ ண் டி ந் த போது – 💣 BOOM 💣 – கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட, இருவர் கொல்லப்பட்டதுடன் சுமார் 20 பேர் காயமுற்றனர்.

அன்று இலங்கைவாழ் பாலிவுட் ரசிகர்கள் இரு அதிர்ச்சிகளை எதிர்கொண்டனர். அதில் ஒன்று அதிர்ச்சி; இன்னொன்று பேரதிர்ச்சி.

அதிர்ச்சிக்குக் காரணம் குண்டுவெடிப்பு. பேரதிர்ச்சிக்குக் காரணம், அடுத்த நாள் பேட்டியில் உணர்ச்சிவசப்பட்ட ஷாருக் கான் ‘அல்லாஹ் காப்பாற்றினான்’ என ஸ்டேட்மெண்ட் கொடுத்ததுதான்.

அன்று பல die-hard ஷாருக் ரசிகர்கள் வெளிக்காட்டிய ரியாக்ஷன் செம காமெடியாக இருந்தது:

‘ඈං! ෂාරුක් තම්බියෙක්ද බං?!’ 😑

Rimzan Amanullah

No comments

Powered by Blogger.