January 31, 2020

சீனர்களை கண்டு அச்சமடைய வேண்டாம், மிருக கொலையை நிறுத்த அந்நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கை

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக  அதிகளவிலானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் கவலை  வெளியிட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலியே  ரத்தனதேரர் அந் நாட்டு மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் எனவும் வைரஸ்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் விரைவில் நலமடைய  பிராத்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை ,மிருக கொலையை நிறுத்துவதற்கான சட்டமொன்றை  கொண்டுவருமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம்  கோரிக்கையொன்றையும்  முன்வைத்துள்ளார். 

இராஜகிரியவில் உள்ள சதஹம் செவனவில் இன்று -31- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை  தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது,   

கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய  ரீதியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் , இதன் தாக்கம் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையிலாக அனைத்து வித நடவடிக்கைகளையும் , சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில்  அநாவசியமாக பயப்பட வேண்டிய  தேவை  இல்லை. ஆகவே ,கொடுக்கப்படும் உண்மை தகவல்களுக்கு அமைய செயற்படுவதன் ஊடாக  இந்த நோய் நிலைமையை உரிய  வகையில் எதிர்கொள்ளகூடியதாகவிருக்கும்.  

அத்துடன்,  இந்த வைரசின்  தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சீன மக்களையிட்டு கவலையடைகின்றோம்.

கொரோனா  வைரசின் தாக்கம் தொடர்பில் சுகாதார  அமைச்சு  மக்களை தெளிவு படுத்த வேண்டியது அவசியமானதாகும். கொரோனா வைரஸ்  வெறுமனே நோய் தாக்கத்திற்கு உள்ளானவருடைய வியர்வை எச்சில் பட்டால் பரவும் என்று  நினைப்பது தவறான விடயமாகும்.

இந்த வைரஸ் எமது வாய் மற்றும் மூக்கின் ஊடாக  உடலினுள் பிரவேசிக்கும் போது மாத்திரமே இந்த நோயின் தாக்கம் ஏற்படுகின்றது.

ஆகவே தான் முக மூடிகளை பாவிப்பது சிறந்தது என  கூறப்படுகின்றது. 

அதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி எம்மிடத்தில் காணப்படும் பட்சத்தில் இந்த வைரசின் தாக்கம் ஏற்படாது.  

இந்த வைரசின் தாக்கம் ஏற்படும் அனைவருமே உயிரிழப்பதில்லை. சிறுவர்கள் இந்தவைரஸ் தாக்கத்திற்கு  உள்ளாகும் நிலைமை மிக   குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

இது வரையில் சீனாவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகளவில்  உயிரிழந்துள்ளனர்.

அவ்வாறெனின் நோயெதிர்ப்பு சக்கதி குறைந்த  மட்டத்தில் இருப்போரையே வைரஸ் அதிக  அளவில் தாக்குகின்றது என அவர் தெரிவித்தார்.

(ஆர்.விதுஷா)

9 கருத்துரைகள்:

வந்துட்டாரு நம்ம ரஜினி

அவர்களைக் கண்டு எமக்கு அச்சமே இல்லை. உங்களுடன் ஒப்பீட்டு அளவில்.

சீனாவில் மனித மாமிசமும் சாப்பிடுகின்றார்களாம். அப்படியானால் இவனைப் பிடித்து சீனாவுக்கு அனுப்பிவைக்கவேண்டும்.

இந்த சொட்டைகளை போன்றும் இந்திய இந்து தீவிரவாதிகளை போன்றும் சீனர்கள் முட்டாள்களாக இருந்தால் இன்று ஆசியாவில் வல்லரசாகியிருக்க முடியாது.

வந்துட்டாறு MBBS மொட்ட

For him aluthgama, ampara, Digana, Kandy, kurunagala minuwangoda burning muslim houses and killing is not and issue but advising chinese not kill animal for eating is important.... In srilanka millions of fishes are killed dor food... chickens are kiledd for food.. why not trying stop it... ?

இவரு பலோபியன் ஸ்பெஷலிஸ்டு தானே..
இவரு எப்ப கொரோனா ஸ்பெஷலிஸ்டு ஆனாரு...

போய் பலோப்பியன் டியூப் ஊதுர வேலைய பாரு

எல்லாம் முடிந்து இலுப்பையில் ஏறியதாம் முடப்பே,இந்த மொட்டப்பே. எதை க் கொடு த் தா லும் கதைப்பார்கள், அப்படி அறிவாளிகள் நம் சொட்டைத்தலைகள். மகனே உனக்கு முடிந்தால் கலியாணம் முடித்து க் காட்டு பார்க்கலாம்.ஹி....ஹி....ஹி

Post a comment