Header Ads



சடலத்திற்கு முன் கண்ணீர்விட்ட, அயதுல்லா கமேனி


ஈராக்கில் கொல்லப்பட்ட ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியின் சவப்பெட்டி முன் அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கண்ணீர் விட்ட சம்பவம்  நடந்துள்ளது.

அமெரிக்க படைகள் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நடத்திய தாக்குதலில் ஈராக்கின் இரண்டாவது கட்டளைத் தளபதி ஜெனரல் சுலைமானி மற்றும் ஈராக்கின் அபு மஹ்தி அல் முஹாண்டிஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக பென்டகன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட இருவரின் இறுதி ஊர்வலம் ஈராக்கிய நகரமான காஸ்மெயினில் சனிக்கிழமை காலை தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானகள் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தளபதி சுலைமானியின் உடல் இன்று ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் கலந்துக்கொண்டனர்.

கொல்லப்பட்ட ஈரான் ஜெனரல் சுலைமானியின் இறுதி பிரார்த்தனை ஓதிக்கொண்டிருக்கும் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கண்ணீர் விட்டு கதறி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

தெஹ்ரானில் மக்கள் வெள்ளத்தில் சுலைமானியின் இறுதி ஊர்வலம் நடந்து வரும் நிலையில், அவரது உடல் சொந்த ஊரான கெர்மனில் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.