Header Ads



மத்திய கிழக்கு முழுவதும், அமெரிக்கர்களின் சடலங்களை பார்க்கலாம்: ஈரானின் புதிய தளபதி


மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்கர்களின் சடலங்களை பார்க்கலாம் என ஈரானின் புதிய தளபதியாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்மெயில் கானி ஏற்கனவே கூறியிருந்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உயரடுக்குப் படையின் முன்னாள் தலைவரான குவாசிம் சுலைமான் நேற்று அதிகாலை ஈராக்கில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவமானது உலகநாடுகளுடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் தலைவர் அலி கமேனி, குட்ஸ் படையின் துணைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் எஸ்மெயில் கானியை புதிய தளபதியாக அறிவித்தார்.

மேலும், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறியதோடு, அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் புதிய தளபதியாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்மெயில் கானி, கடந்த 2017ம் ஆண்டு ஈரானிய ஊடகத்தில் பேசியிருந்தது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.

அப்போது பேசிய அவர், "நாங்கள் எல்லோரிடமும் சொல்கிறோம், பொறுமையாக இருங்கள்... மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்கர்களின் இறந்த உடல்களை பார்க்கலாம்."

டொனால்ட் ட்ரம்பின் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அமெரிக்காவை சேதப்படுத்தும். ட்ரம்பிற்கும், அமெரிக்காவிற்கும் எதிராக எப்படி போராட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என கூறியிருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

2 comments:

  1. காமேடி பீஷு

    ReplyDelete
  2. ஈராக் லிபியா ஆப்கானிஸ்தான் சிரியா வரிசையில் தற்போது ஈராக்
    அடுத்தது,,,,,,பாக்கிஸ்தான் துருக்கி,,

    ReplyDelete

Powered by Blogger.