Header Ads



அவுஸ்திரேலியாவுக்காக பிரார்த்திக்குமாறு ACJU உருக்கமான வேண்டுகோள்

அவுஸ்திரேலியா நாட்டை பாதித்துள்ள பயங்கர காட்டுத்தீ உலக மக்கள் அனைவரையும் பெரும் கவலை கொள்ளச் செய்திருக்கின்றது. இதுவரை மில்லியன் கணக்கான ஹெக்டர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது; உயிர் சேதமும் ஏட்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்து ஐநாறுக்கம் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீயினால் அழிந்துள்ளன; மில்லியன் கணக்கான வனவிலங்குகளும், கால்நடைகளும் பலியாகியுள்ளன; தீயினால் தோன்றும் புகையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஓரளவு மழை பெய்ய துவங்கியுள்ளமை மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ள இவ்வனர்த்தம் அவசரமாக நீங்க வேண்டும்; தீ கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்; மழை பொழிய வேண்டும்; மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்   இதுவே நம் அனைவரதும் அவாவும், பிரார்த்தனையும் ஆகும். 

அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ள இவ்விடர் நீங்கி அந்நாடு என்றும் போல் நலமோடு வளமாக இருக்க இறைவனிடம் இரு கரமேந்தி பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் உருக்கமாக வேண்டிக் கொள்கின்றது.

முப்தி எம். ஐ .எம் ரிஸ்வி 

தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்-ஷைக் ஏ.சீ அகார் முஹம்மத் 

பிரதித் தலைவர் 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

3 comments:

  1. இவனுகளுக்கு பலாஸ்தீன் எல்லாம் கண்ணுல பட மாட்டாது????

    ReplyDelete
  2. Shafraz khan.. enna miruham da neengal ella..

    ReplyDelete
  3. Safraz Khan pls quiet your words.
    We are Always balance the world

    ReplyDelete

Powered by Blogger.