Header Ads



ஐதேக தலைவராக கரு, ஐதேமு தலைவராக சஜித் - 48 மணித்தியாலம் அவகாசம் கேட்கும் ரணில் - Exclusive News

- AAM. Anzir - 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக கரு ஜயசூரியவும், ஐக்கிய தேசிய முன்னணி தலைவராக சஜித் பிரேமதாசாவும் செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்பதில், சபாநாயகர் கரு ஜயசூரிய மிகவும் உறுதியாக உள்ளார்.

அவர் கடந்த 2 நாட்களில் தனது, உத்தியோகபுர்வ இல்லத்திற்கு அழைத்து ரணிலுக்கும், சஜித்திற்கும் கட்சியின் ஒற்றுமை குறித்து பெரிய பாடத்தையே நடத்தியுள்ளார்.

இதையடுத்து தான் தேசிய ஐக்கிய முன்னணி தலைவராக செயற்படவும், கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சி தலைவராக செயற்படவும் சஜித் பிரேமதாசா தனது முழு இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு தனது சம்மதத்தை தெரிவிக்க, ரணில் விக்கிரமசிங்க 48 மணித்தியாலம் அவகாசம் கேட்டுள்ளார்.

ரணில் இணக்கம் வெளியிட்டால் ஐதேக.க்குள் நிலவிய மோதல் நிலை முடிவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. In 48 hours whom is going to talk to....MR?

    ReplyDelete
  2. Why Ranil needs 48 hours to make his decision? Does he have to get Mahinda’s approval?

    ReplyDelete

Powered by Blogger.