Header Ads



Dr ஷாபி மீது மீண்டும் குற்றச்சாட்டு - ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் தலையிடக்கோரும் தொழிற்சங்கம்


டொக்டர் மொஹமட் ஷாபியினால் பெண்கள் சிலர் கரு தரிப்பதை தடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்துவகை தொடர்பில் இதுவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை என நீதிக்கான தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கொழும்பில் இன்று -10- நடைபெற்ற ஊடக சந்திப்பில் கூறினார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் குறித்த விடயம் தொடர்பில் கடந்த அரசாங்க காலத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களம் பக்கச் சார்பான விசாரணையை நடத்தியதாக தெரிவித்தார். 

இந்த குற்றச் சாட்டுக்கள் குறித்த அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் வீரபண்டார, ´ஷாபி வைத்தியரை பொது நிர்வாக அமைச்சகத்திற்கு அழைத்து எனக்கு எதிராகவே விசாரணையை நடத்தப்பட்டது. எனக்கு எதிராகவே வாக்குமூலம் பெறப்பட்டது. அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியாவார். அவர் பிரதான சாட்சியாளருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அனைத்தும் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றன. இது ஒரு அரச ஒடுக்கு முறையாகும். 

எம்மை கைது செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டன. திசேரா, சானி அபேசேகரவை வழிநடத்தினார். 850 குற்றச்சாட்டுக்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அது குறித்து விசாரணை செய்வதற்கு பதிலாக பிரதிவாதியை விடுவித்து விசாரணைகளை நடத்தினர். நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டன. அதனால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆகவே, நியாயம் கிடைக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன செயற்பட வேண்டியது அவசியம்.´ என தெரிவித்தார்.

9 comments:

  1. துவேஷக்காரர்களின் ஆட்சி தானே இனி நானே ராஜா நானே மந்திரி நீதிவான் என்ற மாதிரி தான் நடக்கும்.முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றுபட வேண்டும் எதிரிகளை வெல்ல வேண்டுமென்றால்.

    ReplyDelete
  2. இந்த அநியாயக்காரர்களுக்கும் ஒரு எல்லையுண்டு.

    ReplyDelete
  3. என்ன நீதிக்கான தொழிற் சங்க ஒன்றியமா?😄😄

    ReplyDelete
  4. A just inquiry is the order of the day! Why is Dr. Shafi's people worry about that?

    ReplyDelete
  5. நிச்சியமாக முஸ்லிம்கள் அனைவரும் கட்சி, இயக்கம், சமய சார்பு ஜமாஆத் அனைத்துக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்கள் என்ற கொடியின் கீழ் மாத்திரம் தான் இந்த துவேச,இனவெறிக்கு எதிராக போர்க் கொடி தூக்க முஸ்லிம்களால் இயலுமாகும். வேறு எந்த முயற்சிகளும் முஸ்லிம்களுக்குச் சார்பாக அமையும் என எதிர்பார்க்க முடியாது.

    ReplyDelete
  6. Yaar thuwesam. UNP Dr.Shafi ku enna niyayam valangiyazu?

    ReplyDelete
  7. இந்த கொடுமக்காக தானே எமது சமூகம் மொட்டுக்கு வாக்கலிப்பதில்லை

    ReplyDelete
  8. Unp இருந்தால் தானே ஷாபி வெளியே வந்தார் திரும்ப இந்த ஆட்சியில் உள்ளே அனுப்ப தடுமாற்றம்

    ReplyDelete
  9. Dr. Shafee was targeted by some business men due to a property transaction.. Also all the allegations were proved false and 69 out of 70 nurses gave evidence that he is innocent...one couldn't as she was sick.
    Even they bribed some people to staged this drama... May the truth prevail and falsehood to be doomed..

    ReplyDelete

Powered by Blogger.