Header Ads



மருத்துவ கடனைச்செலுத்த உதவி, கோரும் மத்ரசா மாணவன்


இவர் சம்மந்தமாக 13/12/2016 அன்று  jafnamuslim இணைய தலத்தில் வெளியான பதிவைக் காண: http://www.jaffnamuslim.com/2016/12/2_13.html

நுவரெலிய சில்மியாப்புரையைச் சேர்ந்த 21 வயதான முஹம்மத் பௌசுல் ஹமீத் அவர்கள் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் உங்கள் உதவியை வேண்டுகிறார். என்ற செய்தியை இணையதளங்கள் மூலம் முன்னரே நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையில் இவரின் இரு சிறு நீரகமும் 2016 ஆம் ஆண்டிலிருந்து பழுதடைந்து வந்தது. எனவே இவருக்கு சிறு நீரக மாற்று சிகிசிச்சை செய்ய வேண்டுமெனவும் அதற்காக 2000,000/- ரூபாய் (இருபது இலட்சம்) செலவாகுமெனவும் வைத்தியர்கள் கூறினர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் தாயின் பராமரிப்பில் மட்டுமே உள்ளபடியால் இத்தொகை என்பது பாரிய சுமையாகும்.

எனவேதான் இவரின் தாய் எம்மை தொடர்பு கொண்டு இவரின் சத்திர சிகிசிச்சைக்காக நிதி திரட்டித் தருமாறு கோரினார். அந்த வகையில் நாமும் இச்செய்தியை மக்களுக்கு தெரியப்படுத்தி 13/12/2016 ஆம் திகதியிலிருந்து 18/07/2017 வரை நிதி சேகரித்தோம்.
(இவர் சம்மந்தமாக 13/12/2016 அன்று பிரசுரித்த பதிவைக் காண= https://www.facebook.com/story.php?story_fbid=1192420584145312&id=100001321458343)

இக்காலப்பகுதியில் எமக்கு 195010/- ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றது அதனை உரிய முறையில் அவர்களின் வாங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தோம். (இதற்கான கணக்கறிக்கையைக் காண: https://www.facebook.com/story.php?story_fbid=1414926151894753&id=100001321458343 ) மேலும் சில சகோதரர்கள் நேரடியாகவே அவரின் வங்கிக் கணக்கிற்கு நிதியை அனுப்பியும் வைத்திருந்தனர். என்றாலும் கிடைக்கப்பெற்ற நிதி குறைவாகவே இருந்தது.

இதட்கிடையில் அவரின் இரு சிறு நீரகங்களில் ஒன்று மிகவும் பழுதடைந்ததால் உடனடியாக சத்திர சிகிச்சை செய்து அகற்ற வேண்டுமென வைத்தியர்கள் கூறினர். அதனடிப்படையில் 17/10/2017 அன்று சுமார் 200000/-ரூபாய் ( இரண்டு லச்சம்) செலவில் சத்திர சிகிச்சை மேட்கொள்ளப்பட்டு ஒரு சிறு நீரகம் அகற்றப்பட்டது.

மேலும் 13/12/2016 லிருந்து 21/10/2019 வரை dialysis செய்யப்பட்டு அவருக்கான மருத்துவம் தொடரப்பட்டது.  இவருக்காக சேகரிக்கப் பட்ட நிதிகள் அனைத்தும் அவரின் மருத்துவ செலவுகளுக்கே போதாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

அதன் பிறகு அல்லாஹ்வின் உதவியால் சிறு நீரகம் கிடைக்கப்பெற்று 21/10/2019 அன்று நல்லபடியாக சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை மேட்கொள்ளப்பட்டது. என்றாலும் இவரின் மருத்துவத்திற்காக பெறப்பட்ட சுமார் 750000/- ரூபாய் ( ஏழரை லச்சம்) கடனை செலுத்த முடியாமல் இருக்கின்றார் எனவே இவரின் கடனை செலுத்த உங்களால் முடியுமான உதவிகள், மற்றும் ஸகாத் நிதிகளை வழங்கி உதவுமாறு தயவாய் வேண்டுகிறோம்.உதவி வழங்குபவர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கிற்க்கோ அல்லது நேரடியாகவோ வழங்கலாம்.

மேலும் இச்செய்தியை Share செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

இவர் சம்மந்தமாக முன்னர் பெறப்பட்ட கடிதங்களையும் இணைத்துள்ளோம்.

அல்லாஹ் எம் அனைவர்களது தர்மங்களையும் பொருந்திக் கொள்வானாக.

மேலதிக தொடர்புகளுக்கு : 
ரிபான் மௌலவி: +974 - 66143138 / 50608099 (கத்தார்)
ரஷீதா உம்மா (தாய்) : +94-766610431

வங்கிக் கணக்கு:
A.Fawsul Hameed
A/C No: 78068723
Bank: BOC
Branch: Boragas


தொடர்பு கொள்ள: +97466143138 றிபான் (மௌலவி)

No comments

Powered by Blogger.