Header Ads



ஜனாதிபதி கோத்தாபய நிர்வாகத்தின் கீழ், புதிய அரசாங்கத்தின் முதல் வெளிநாட்டு முதலீடு இதோ

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் வெளிநாட்டு முதலீடு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள பாலதக்ஷா மாவத்தையில் பெய்ரா ஏரி மற்றும் ஷாங்க்ரி-லா ஹோட்டலுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு பகுதியலேயே இந்த முதலீட்டு திட்டம் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

700 புதிய குடியிருப்புக்களையும் பல வர்த்தக நிலையங்களையும் உள்ளடக்கிய 30 மாடி வணிக கட்டத்தை நிர்மாணிக்கும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்ட முதலீட்டுத் திட்டமாகும். 

இந்த முதலீட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளதுடன், இந்த திட்டத்திற்கான நிலம் ஒப்பந்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்படும். மேலும் குத்தகைக்கான கட்டணமாக இலங்கை அரசு 43 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.