Header Ads



றிசானா நபீக்கும், முசாத்திக்காகவும்...!

இன்று பலரும் மூதூர் , சாபி நகரை சேர்ந்த மீராசா முசாதிக்கா எனும் மாணவியை பற்றி அதிகம் எழுதுகிறார்கள்.

அவளது செய்தியை படிக்கையிலே சில விடயங்கள் மனதை அழுத்துகிறது.

முதல் விடயம் , இவளது வீடும் ,மரணித்த ரிசானாவின் பகுதியிலேயே அமைந்திருப்பதாக கிடைக்கும் செய்திகள் , ரிசானாவை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது.

அதே வறுமைக்குள் சிக்கி தான் , இவள் படித்திருக்கிறாள்.

இரண்டாவது விடயம் , இவளை போன்ற ஏழைகள் எதையாவது சாதித்த பின்பே பணக்காரர்களுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் கண்ணுக்கு தெரிகிறார்கள்.

இனி தான் , இவளுக்கு உதவவும் பலரும் முண்டியடிப்பார்கள்.

இனியாவது , ஷாபி நகர் போன்ற ஒரு கிராமத்தை நமது சேவகர்களால் ஒன்று சேர்ந்து தத்தெடுக்க முடியுமாயின் அது மரணித்த ரிசானா , மற்றும் இந்த முசாதிக்கா போன்றோரால் உருவான எழுச்சியாய் இருக்கும் - இதுவே நமது எழுத்து மூலமான சவாலும்....

ஏழைகள் சாதித்த பின்னர் முண்டியடிக்காது , பல ஏழைகள் சாதிப்பதற்கு வழி வகுக்கலாம் என்பதே , நமது ஆதங்கம்.

போலியாக வாழ்த்துக்கள் சொல்ல , நான் விரும்பல சகோதரியே...

மேலும் மேலும் உயர பிரார்த்திக்கிறேன்...

(முஹம்மத் இன்பாஸ்)

3 comments:

  1. படித்துமுடித்துவிட்டு,மாப்பிள்ளை சந்தையில் அவளுக்கேற்ற துணையை தேட மிகப்பெரிய சவாலை எதீர்கொள்ள வேண்டும்

    பல்கலைக்கழக காலத்தில் மாதாந்தம்( சில நேரங்களில் ) பெரியதொரு தொகையை செலவு செய்யவேண்டும்,அல்லாஹ் அவர்களின் கரங்களை பலப்படுத்திக்கொடுப்பானாக

    ReplyDelete
  2. Your plea is indispensable, brother Infas. Excellent.

    ReplyDelete
  3. சகோதரர் இன்பாஸ், உங்கள் கருத்து உண்மையில் வரவேற்கத்தக்கது. முடிந்தால் அது போன்று வறுமையில் வாடும் குடும்பங்களைத் தேடி அவர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியைச் சரியாக கற்க நீங்கள் ஒரு திட்டம் போடலாமே. நிச்சியம் இது போன்ற பல இணையத்தளங்களுடன் தொடர்புடையவர்கள் உதவ காத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.