December 24, 2019

"இந்த 2 கசப்பான உண்மைகளுமே, இலங்கை முஸ்லிம்களின் பின்னடைவுக்கு பிரதான காரணம்"

கடுங்கனதியான கவலை!

எங்களது ஊரில் 56 பள்ளிவாயல்கள், தெருவுக்கு ரெண்டு, இடறி விழுந்தால் ஒன்று என்பதெல்லாம் பெருமை அல்ல...

ஒரு பள்ளிவாயலிலாவது உருப்படியாக இனிமையான குரலில் சிறந்த ராகத்தில் உங்களால் அதான் சொல்ல முடிகிறதா?

தொழுகைக்கு அழைக்கும் அந்த உன்னத அழைப்பு இனிமையானதாக அமைந்தால் மாற்று மதத்தவர்களும் காது கொடுத்து கேட்பார்கள் அல்லவா?

சில பேர் கழுதை கத்துவது போல இருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் எழுதுகிறார்கள்.

அது இனவாத வெளிப்பாட்டில் வருகிற வார்த்தைகளாக இருந்தாலும் அதற்குள்ளும் ஒரு நியாயம் இருக்கிறதோ என்று இலங்கை முஸ்லிம் சமூகம் சுய பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது.

இன்னொன்று.....

ஊருக்குள் பல மத்ரசாக்கள், சின்னஞ்சிறு முஸ்லிம் கிராமங்களுக்குள்ளும் மத்ரசாக்கள்.

சில மத்ரசாக்களில் மாணவர்கள் பத்து வருடங்களாக இல்மு தீனை கற்கிறார்கள் என்றெல்லாம் சிலாகிக்கப்படுகிறது. அதற்காக அடிக்கடி தான தர்மங்கள் செய்யும்படி உதவிகளும் கோரப்படுகின்றன.

இத்தனை மத்ரசாக்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மெளலவிமார்கள் வருடந்தோறும் வெளியாகிக்கொண்டேயிருக்கிறார்கள்.

உங்களது மனச்சாட்சியிடம் கேட்டுப்பாருங்கள் குறைந்தது ஒவ்வொரு வாரமும் ஜம்ஆவிற்கு செல்கிறீர்கள். மாதமொன்றிற்கு 4 அல்லது 5. வருடமொன்றிற்கு 52.

இந்த பிரசங்கங்களில் எத்தனை உங்களது மனதில் நிற்கின்றன ?

எத்தனை காரிகளை ( குர்ஆனை ராகத்தோடு ஓதுபவர்), எத்தனை உலமாக்களை உருவாக்குகிறோம் என்ற எண்ணிக்கை (numbers) முக்கியமல்ல.....

உருப்படியாக அதான் சொல்வதற்கு சமூகத்தில் ஆட்கள் இல்லை என்றால், இந்த “எத்தனைகள்” எதற்காக?

உங்களது தூக்கத்தை கலைக்க பயன்படுத்தும் உத்தியாக ‘காட்டுக்கத்தலை’ குத்பாக்களில் பயன்படுத்தாத, பக்குவமாக காலத்திற்கு ஏற்ற கருத்துகளை புத்திசாலித்தனமாக உபதேசிக்க கூடிய எத்தனை உலமாக்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்?

1. ‘படிப்பு ஏறவில்லை மத்ரசாவில் விட்டாச்சு’ என்ற கருத்தியல் இன்னும் தூர்ந்து போகவில்லை அது 50% இற்கு அதிகமாக இன்னுமிருக்கிறது.

2. அனேகமான மத்ரசாக்களின் பாடத்திட்டங்கள் உலகத்தின் போட்டித்தன்மையினை, நடை முறை வாழ்வை எதிர்கொள்வதற்கு ஏற்றால் போல இன்னும் update ஆகவில்லை.

இவ்விரண்டு கசப்பான உண்மைகளுமே இலங்கை முஸ்லிம் உம்மத்தின் பல்வேறுபட்ட பின்னடைவுகளுக்கும் பிரதான காரணங்களாகும்.

நம்மை நாமே வாசிப்போம்.

மீள்பரிசீலனை செய்வோம்.

Mujeeb Ibrahim

20 கருத்துரைகள்:

Idutan. Unmai. Silar. Va.solluvadu. kaludai. Kadduvadu. Pola tan.

U r absolutely correct.appriciate u.

What a wonderful comment it is!!. Maasha Allah!

தீர்வு இலகுவானது
பாரம்பரிய முறையை தான் பின்பற்றுவோம் என்று கூறுபவர்கள் , ஒலிப்பெருக்கியை பாவிக்காமல் இருந்தால் பிரச்சினைகளில் அரைவாசி தீர்ந்துவிடும். மற்ற அரைவாசி நாம் மட்டும் தான் இஸ்லாத்தில் பேச வேண்டும் மற்றவர்கள் இஸ்லாத்தை பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி நாளே மிகுதி அரைவாசி தீர்ந்துவிடும்.

உங்கள் கருத்து பிழையானது.
01-இனிமையாக அதான் சொல்லாதது பிரதானமான பின்னடைவல்ல மாறாக அதானை கேட்டும் தொழுகைக்கு செல்லாமல் பசாரில் வியாபாரம் செய்யும் எமது சமூகம்தான் பிரதான காரணம்.

02-மிகச்சிறிய வீதமான மாணவர்கள்(உங்கள் கருத்துப்படி) நவீன அறிவு இல்லாமல் உலமாக்களாவதோ உரத்த தொனியில் பயான் செய்வதோ பிரதான பிரச்சனை அல்ல.மாறாக நீங்கள் விரும்பும் நவீன அறிவினை பெறும் 99 வீதமானவர்கள் மார்க்க அறிவில் அலட்சியமாக இருப்பதுதான் காரணம்.

கருத்து வேறுபாடுகள் ஸஹாபாக்கள் மத்தியில் கூட காணப்பட்ட ஒரு விடயம்தான். ஆனால் அவைகள் கண்ணியமான முறையில் அனுகப்பட்டன. மாற்றுக் கருத்துகள் மதிப்பளிக்கப்பட்டன. குறித்த இன்ன இன்ன டத்தில் கற்றால்தான் அவர் உலமா என்ற மனப்பாங்கும் , அதன் உள்ளே மறைந்துள்ள அகம்பாவமும் மாற்றப்பட்டால் நாம் ஓர் உயரிய சமூகமாக மாற முடியும். என்பது எனது அபிப்பிராயம்.
டாக்டர் எம் கே ஹரிஸ் முஹம்மத்

அனைத்தும் உன்மை எனக்கும் இவ்வகையான ஆதங்கம் உண்டு யாரிடம் சொல்வது? யார் சமூக மாற்றத்திர்கான அடித்தளம் இடுவது?

மிக முக்கியமாக இலங்கையில் உள்ள அநேகமான மத்ரஸாக்கள் கொள்கை ரீதியாக பிளவு பட்டுள்ளன. அவைகளை சரி செய்ய அனைத்து மத்த்ரஸாக்களுக்கும் ஒரே பாட திட்டத்தை கொண்டு வர வேண்டும். சனி ஞ்சாயிறு கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். இப்படி அதிகாமாக உள்ளன
மர்சூக் தோப்பூர்

படிப்பு ஏறாவிட்டால் மத்ரஸா என்ற நினைப்பு மாற வேண்டும்
அதிகமா நல்ல படிக்க கூடிய மாணவர்களையே மத்ரஸாக்கள் தெரிவு செய்து எடுக்க வேண்டும்- உதாரணத்திட்க்கு ஜாமியா நளீமியா போன்ற மத்ரஸாக்கள் செய்வது போல - தொழுகைக்கு அதான் சொல்ல மட்டுமல்ல பள்ளிவாயல் முஅத்தினாக மௌலவி மார்களையே நியமிக்க வேண்டும்

(Already replied to you.
This is just reminding)
������
மேற்படி ஆக்கத்தை எழுதியவருக்கு எம் புத்திமதி

������

உலகக் கலைகள் கற்ற மேதைகளே!!!
மத்றஸாக்கள் மீள்பரிசீலனை செய்யத் தொடங்கி விட்டன,
பாடசாலைகள், பிரத்தியோக வகுப்புக்கள் பற்றி சிந்தித்தால் போதும்


அல்லாஹ்வின் அருளால் அண்மைக்காலமாக மத்றஸாக்கள் மிகச்சிறந்த முன்னேற்றங்களை கண்டு வருகின்றன.
பல மத்றஸாக்களில் ஹதீஸ் மற்றும்
கிறாஅத் துறைகளில் கூட பல மேற்படிப்புக்கள் எம் நாட்டிலேயே அறிமுகப்படுத்தி நடாத்தப்பட்டு வருகின்றது.

பல மொழிகளில் தேர்ச்சி
பெற்ற பல திறமையான உலமாக்கள் உருவாகி வருகின்றனர்.

அழகிய முறையில் ஜூம்மா மேடைகளை அமைக்கக்கூடிய பல பயிற்சிகளும் மத்றஸாக்களில் கொடுக்கப்பட்டு அவ்வாறான சிறந்த உலமாக்களும் உருவாகி வருகின்றனர்.

11 ஆண்டுகள் பாடசாலை, Class என்று அலைந்து ,திரிந்தும் 9 பாடங்களிலும் 9 failed மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு மத்தியில் 1 or 2 மாதங்களே கற்று விட்டு 9A எடுக்கும் மாணவர்களும் மத்றஸாக்களில் உருவாகி வருகின்றனர்.

இருந்தும் இன்னும் முன்னேற்றங்கள் வேண்டும் என்ற நல்ல நோக்கில் சகோதரரால் மேற்படி ஆக்கம் எழுதப்பட்டிருப்பின் அதை வரவேற்று இன்னும் முன்னேற்றங்களுக்காக சிந்திப்போம்.
நன்றி

ஆனால்,
நாம் குறிப்பிட விரும்புவது...
������

தற்போது, மார்க்க நிலையங்களை, உலமாக்களை, ஜூம்மா உரைகளை குறிவைத்து விமர்சிக்கக்கூடிய நவீன வைரஸ் பரவி வருகின்றது...

இவ்வைரஸில் கண்ட கண்ட படித்த(மேதைகள்) என்று கூறக்கூடியவர்கள் பலர் மாட்டிக்கொண்டுள்ளனர்...

அவர்களுக்கு நாம் கூறும் அறிவுரை...

உலகக் கலைகளை கற்றுத் தேர்ந்தவர்களே,
முதலில் நீங்கள் கற்ற
உலகக் கல்வியை கற்பிற்கும் பாடசாலைகளை நோக்குங்கள்.

கடந்த வருடங்களில் காத்தமண்ணில் O/L பரீட்சையில் இஸ்லாம் பாடத்திலேயே 100 கணக்கான மாணவர்கள் failed... என்ற செய்தி கிடைத்ததோ???

அண்மையில் ஒரு பிரபல பாடசாலை உபஅதிபர் கூறியது,
O/L படிக்கும் மாணவன் இன்னும் தமிழ் வாசிக்க தெரியவில்லை.
(????)

போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்கள் பலர்,
இன்னும், பாடசாலைகளில் நடக்கும் ஒழுக்க சீரழிவுகள் பட்டியலிட்டே செல்லலாம்.

பள்ளிகளில் அழகிய தொனியில் அதான் சொல்ல ஆளில்லை என்று கவலைப்படுவோரே!!!

பள்ளிகளில் சுபஹ் தொழுகைக்கு 10/: ஆன பாடசாலை மாணவர்களும் இல்லை...என்ற செய்தி கிடைக்கவில்லையா?
(அதான் அழகா சொல்லாவிட்டால் பாவமும் கிடையாது,அல்லாஹ் தண்டிக்கவும் மாட்டான், ஆனால் தொழுகை இல்லாமல் இருப்பது பாவம், ஊருக்கே அழிவு என்பதை நினைவூட்டுகின்றோம்)
முதலில்
அதைப்பற்றி சிந்தியுங்கள்.

������
(1) 11ஆண்டுகள் தொழுகையும் இல்லாமல் படித்து பல லட்சம் செலவழித்து O/L பரீட்சையில் 9 fail எடுப்பதை விட
*படிப்பு ஏறவில்லை என்று* மத்றஸாவிற்கு சேர்த்தால் அது மிக புத்திசாலியான முடிவே!
ஏனெனில், அவனது 6/7 ஆண்டுகள் நல்ல சூழலில் ஒழுக்கத்தைக்கற்று மார்க்கத்தின் அடிப்படைகளை புரிந்து 5நேரம் தொழுகையுடன் கழிவதே பெரும் பாக்கியமே...

(2) மத்றஸாக்கள் போட்டித்தன்மைக்கு கற்பிக்கப்படுவதில்லை... படைத்தவனின் தொடர்பை பெற்று பெருமானார் விட்டுச்சென்ற அமானிதத்தை உள்ளத்தில் சுமந்து சமூகத்திற்கு வழிகாட்டவே கற்பிக்கப்படுகின்றது...

*நடைமுறை வாழ்விற்கு ஏற்பதான் குர்ஆன்,பெருமானாரின் வாழ்வு வழிகாட்டியுள்ளது.*

எம் நடைமுறை வாழ்வைத்தான் குர்ஆன் மற்றும் பெருமானாரின் வாழ்விற்கு ஏற்றாற் போல மாற்ற வேண்டுமே தவிர, நடைமுறைவாழ்வுக்கு ஏற்றாற் போல நாம் மாற வேண்டியதில்லை என்பதை மனதில் பதியவையுங்கள்.

நம்மை நாமே மாற்றுவோம்...
மீள்பரிசீலனை செய்வோம்...

(அண்மையில் எமது ஊருக்கு வருகை தந்த ஹக்கானிய்யா மத்றஸா அதிபர் லபீர் ஹஸ்ரத் -
இவ்வாறான நவீன வாதிகளின் நச்சுக்கருத்துக்களை பற்றி விளிப்புணர்வூட்டியதை நினைவூட்டுகின்றேன்...

*நவீன ஜூம்மா* என்ற கருத்தில் ஜூம்மாக்களை மாற்ற வேண்டும் என்று அதற்கான திட்டங்கள் போட்டு ஜூம்மா மேடைகளில்
சுவர்க்கம், நரகம், கியாமத்தை பற்றி பேசப்படுவது குறைந்ததே இன்றைய உம்மத் வீழ்ச்சிக்கு காரணம் என்ற மூத்த உலமாவின் கருத்தை சுட்டிக்காட்டினார்கள்)

I'm exactly stay beside mosque and i know how this mu'addin call Adan. The prounciation it self wrong and how can expect the level of heartmelting rhythm.
This Should consider by relevant committee and organize well.

SBAR YOU ARE IDIOT.What u know of so called LAFEER moulavi.He is a half baked moulavi.I have listen his bayaans no stuff just a karkoon style bayaan do not take him as aexampe take umardeen hazrath or ramaaln moulavi as a example brother!

கட்டுரையாளரின் கருத்துக்களில் ஒரு பகுதியுடன் நானும் உடன் படுகின்றேன். ஒரு பகுதியை மறுதளிக்கின்றேன்.

ஒரு கருத்தை சமூகமயப்படுத்த நினைப்பவர் தனது வார்த்தைப் பிரயோகங்களை முடியுமானளவு பக்குவமாக அமைத்துக்கொள்வதே சிறந்தது என நினைக்கின்றேன். தவறொன்றை கலையும் எண்ணத்தில் எழுதுபவர்கள், கதைப்பவர்கள் தமது எண்ணத்தை தூயதாகவும் தவறுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காகவுமே அமைத்துக்கொள்ள வேண்டும்.

அழகிய, பக்குவமான வார்த்தைப் பிரயோகங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தலாம்.

உண்மையில் தவறு இருக்கின்றது என்றிருந்தால் கூட அதனை முறை தவறி, கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் சுட்டிக்காட்டப்படுகின்ற போது சம்பந்தப்பட்டவர்கள் மேலும் எரிச்சலடைந்து, பிடிவாதம் கொண்டு தமது தவறுகளை திருத்திக் கொள்வதற்கு பதிலாக மென்மேலும் குறித்த தவறுகளை செய்வதில் உறுதி கொள்ளக்கூடும்.

தவறுகள் சுற்றிக்காட்டப்படும் போது, சமூக மயப்படுத்தப்படும் போது நோக்கங்கள், எண்ணங்கள் தவறாக இருக்குமானால் உலகில் மாற்றங்களை எதிர் பார்க்க முடியாதிருக்கும். மறுமையில்லும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

தவறுகளை கலைதல் (அந் நஹீ அனில் முன்கர்) எனும் பகுதியை ஷரீஆ பல படிமுறைகளாக அமைத்து வைத்துள்ளது. ஒரு சில சந்தர்ப்பங்களை தவிர மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நலினத்தை கலைந்து கடினப்போக்கை கையாழ்தல் என்பது இறுதித் தெரிவாகவே இருக்க வேண்டும்.

கழுதை கத்துவது போல,
காட்டுக்கத்தலை குத்பாக்களில் பயன்படுத்துதல்,
படிப்பு ஏறவில்லை மத்ரசாவில் விட்டாச்சு,

போன்ற சொற்பிரயோகங்கள் சில வேலை ஒரு தனிப்பட்ட பேச்சுக்கோ, விமர்சனத்திற்கோ பொருந்தக்கூடியவையாக இருக்கலாம். சம்பந்தப்பட்டவர்களின் தவறுகளை கலையவோ, சமூகமயப்படுத்தவோ பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை

ஊருக்கு, ஊர் மத்ரசா என்பதை தவிர்த்து பல ஊர்களுக்கு ஒரே திறம்வாய்ந்த, சகல வளங்களையும் கொண்ட ஒரு அரபு மத்ரசாவே இருக்கவேண்டும் என்பதிலும், அது ஒரு உயர் கலாசாலை போன்ற விதத்தில் அமைய வேண்டும் என்பதிலும், பள்ளிவாசல்களில் மிக அழகான விதத்தில் அதான் ஒலிக்கப்பட வேண்டும் எனும் விடையத்திலும், ஒரு பகுதியில் உள்ள ஒரு பள்ளி வாசலில் மாத்திரம் வெளி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டு (அப்பகுதி முழுவதற்கும் கேட்கும் விதத்தில்) அழகிய முறையில் அதான் ஒலிக்கப்பட வேண்டும் என்பதிலும் சமூகம் அதிகம் சிந்திக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடுமாகும்.

படிப்பு ஏறவில்லை, மத்ரசாவில் விட்டாச்சு போன்ற வார்த்தை பிரயோகங்களை எழுத்தாளர் மீள் பரிசீலனை செய்வது சிறந்தது. அது 1980 களிற்கு, அதற்கு முந்திய காலப்பகுதிகளுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கலாம்.
ஏனெனில் நான் அறிந்த வரை கடந்த பல வருடங்களாக மிக அதிகமான மத்ரசாக்களில் பிள்ளைகளின் கல்வித்தரம், நன்நடத்தை அனைத்தும் பரிசீலிக்கப்படுகின்றன. நேர்முகப்பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கும் பிள்ளைகளில் திறமையானவர்கள் மாத்திரமே மத்ரசாக்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.

இன்றைய இளைய தலைமுறையினரில் அதிகமானவர்களின் Comments பெரும்மிபாலான சந்தர்ப்பங்களில் கவலையளிக்கும் படியாகவே அமைந்துள்ளன. சமூகத்தை, சமூகத் தலைமைகளை காலாய்த்துக் கொண்டிருக்க, கேலி செய்து கொண்டிருக்க அவர்களுக்கு ஏதாவது கிடைத்து விட்டால் போதும். பாரதூரம் பற்றி சிந்திக்காது மிகவும் கண்ணியக்குறைவான வார்த்தைகளால் எழுத ஆரம்பித்து விடுகின்றனர். இன்றைய தலைமைகளை, மூத்தவர்களை மதிக்காத, மதித்து எழுதத் தெரியாத நீங்கள் நாளை சமூகத்தலைமைகளாக்கப்பட்டால் உங்களை அப்போதுள்ள இளைய தலைமுறையினர் மதிப்பார்கள் என எதிர்பார்க்கின்றீர்களா ?

சிறப்பான நாகரீகமான விமர்சனங்கள் நல்ல மார்க்கத்தைப் பின்பற்றுவோரின் வார்த்தைப்பிரயோகங்கள் இவ்வாறு தான் அமையும். கட்டுரையாளர் உணர்ச்சி வசப்பட்டு வரம்பு மீறியுள்ளார். அருவருப்பான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார்.

Post a Comment