Header Ads



றிசாத் - ஹக்கீமை எனது வீட்டுக்கு அனுப்பி, கூறப்பட்ட விடயங்கள் என்னிடம் உள்ளன

மீண்டும் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல தயாரில்லை எனவும் இன்றைய தினத்திற்குள் அந்த அரசியல் தீர்மானத்தை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு காசல் வீதியில் இன்று -07- நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஒதுக்கி வைக்கப்படுவது, வெட்டு, குத்துக்களை பொறுத்துகொள்ள முடியவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகினாலும் செயற்பாட்டு ரீதியான அரசியலில் இருந்து விலக போவதில்லை.

கோத்தபாய ராஜபக்சவுடன் முன்னிலையில் இருப்பேன். நான் கட்சியில் இருந்து விலகி அனைத்து சந்தர்ப்பங்களிலும் றிசார்ட், ஹக்கீம், சுமந்திரன் மட்டுமல்லாது ராஜித, ரவி, ஜோன் அமரதுங்க உள்ளிட்ட அணியினரை எனது வீட்டுக்கு அனுப்பி அவ்வப்போது வழங்கிய வாக்குறுதிகள், கூறியவைகள், நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பான சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் மற்று சீ.சீ.டிவி காட்சிகள் என்னிடம் உள்ளன எனவும் வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. நீங்கள் நேர்மையானவர் என்றால் இதை முன்பேயே சொல்லியிருக்கவேணும்.

    ReplyDelete
  2. At last the lazy came on seat

    ReplyDelete
  3. ஹல்லோ நீமர் ஓரமாக நின்றுகொள்வேன் என்று இருந்தால் உம்மை நல்லவனாக நினைக்கலாம் ஆனால் நீமர் பதவி மோகம் கொண்டு சென்றதை முழு உலகமே அறியும் இதில் வேற நீமர் சொல்லும் வார்த்தைகளே "கோத்தபாயவுடன் முன்னிலையில் நிற்பேன்" என்ற வார்த்தை உமது எதிர் பார்ப்பு என்ன என்பதை காட்டுதே!

    ReplyDelete
  4. Who cares this guy and what he is doing? UNP is a not depending on One man show

    ReplyDelete
  5. Useless fellow...superiority complex unp would never take u and deal dasa..

    ReplyDelete

Powered by Blogger.