Header Ads



முஸ்லிம்கள் சார்பாக அதாவுல்லா, அப்படிக் கூறவில்லை - மனோகணேசன் ஒப்புக்கொண்டார்

“அதாவுல்லா விவகாரம்”, தமிழ் - முஸ்லிம் பிரச்சினை அல்ல. அவர் முஸ்லிம் சகோதரர்கள் சார்பாக இதை கூறவில்லை. கூறவும் முடியாது. பெருந்தொகையான முஸ்லிம் சகோதரர்கள் நேரடியாகவும். பகிரங்கமாகவும் என்னிடம் வருத்தமும், அவருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்கள். 

ஆகவே இந்நாட்டில் இன ஒற்றுமைக்கு இந்த சம்பவம் குந்தகமாக அமைய கூடாதென முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோகணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்தே நிதானம் இல்லாமலே நடந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அவரது நடத்தையை முதலில் இருந்தே பார்ப்பவர்களுக்கு இது புரிகிறது.

சக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கூட அவர் “அவன்-இவன்” என்ற ஏக வசனத்தில்தான் பேசினார். தோட்ட தொழிலாளர் பற்றியும், முதலிலேயே சில இடங்களில், “அவன்-இவன்” என்று குறிப்பிட்டபடி வந்தார். பொறுமையாக இருந்தேன்.

நிகழ்ச்சியில் பல நல்ல கருத்துகளையும் அவர் சொன்னார். பல இடங்களில் நடுநிலை தவறி, எல்லாவற்றுக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள்தான் காரணம் என்றும் கூறினார். ஆயுதம் தூக்கும்வரை தமிழ் இளைஞர் சென்றதன் பின்னணியில், பேரினவாதம் இருந்திருக்கின்றது என அவருக்கு புரிய வைக்க பல இடங்களில் நான் முயன்றேன்.

கடைசியில், அந்த “இழிச்சொல்லை” பயன்படுத்தி தோட்ட தொழிலாளர்களை விளித்தார். “அந்த சொல் பிழையானது. அதை வாபஸ் வாங்குங்கள்” என்று எழுந்து நின்று நான் அவருக்கு திரும்ப, திரும்ப சொன்னேன். அவர் வாபஸ் வாங்க மறுத்து பேசிக்கொண்டு போனார். அப்போதுதான் அந்த “சம்பவம்” நிகழ்ந்தது.

"மனோ கணேசன் குவளையில் இருந்த தண்ணீரை அதாவுல்லா முகத்தை நோக்கி வீசியது நிதானம் தவறிய தவறு" என சிலர் இப்போது கூறப்பார்க்கின்றார்கள்.

முதலில் ஒன்றை கூறுகின்றேன். நான் நிதானம் தவறவில்லை. நினைவுபூர்வமாகவே நான் குடித்து எஞ்சி இருந்த தண்ணீரை அவர் முகத்தில் வீசினேன். நிதானம் தவறி இருந்தால், நாற்காலியை அல்லவா தூக்கி வீசி இருப்பேன்?

மேலும் இப்படி முட்டாள் கருத்தாளர்களின் முகங்களை நோக்கி தண்ணீரை வீசி எறிவது உலகம் முழுக்க நிகழ்ந்துள்ளது. வரலாற்று பக்கங்களை புரட்டி தேடுங்கள். ஏனெனில் சிலருக்கு சில “பாஷைகள்” தான் புரியும் என உலகம் எனக்கு சொல்லி தந்திருக்கின்றது.

இன்னொரு புறம், தமிழ் அகராதியை எடுத்து, அந்த இழிச்சொல்லுக்கு விளக்கம் கூறி, அது “இழிச்சொல்” அல்ல என நிறுவ முனைவது, அப்புறம் “அவர் மனோவை பாராட்டினார்”, “மலையக மக்களை பற்றி நல்லபடியாதான் பேசினார்”, “அவர் உள்ளத்தில் இருந்து பேசவில்லை”, “தொண்டையில் இருந்தே பேசினார்” என்றெல்லாம்  கூறவேண்டாம்.

துஷ்ட கருத்துகளை கூறும் துஷ்டனை கண்டால், நான் தூர விலகி போக மாட்டேன். என் கோபத்தை காட்டுவேன். அது நிதானமான கோபம். இந்த கோபம், எனது நிழலைப்போல் என்னுடன் எப்போதும் வாழ்கிறது.

ஒருவேளை நான் கோபப்படாமல், இந்த சொல்லை கேட்டும், சாந்தமாக பதில் கூறி வந்திருந்தால், யோசித்து பாருங்கள், இன்று உலகம் என் மீது கோபப்பட்டிருக்கும். என் வீடு என் மீது உமிழ்ந்திருக்கும். என் நிழல் என்னை கேவலமாக கணித்திருக்கும்.

ஒன்றை மிகத்தெளிவாக கூறிவைத்திட விரும்புகிறேன். எந்தவொரு இனத்தையும், சமூகத்தையும் விளிக்க, அந்த இனம், சமூகம், ‘இழிச்சொல்” என கருதும், சொல்லை எவரும் பயன்படுத்த முடியாது. அதேபோல் மலைநாட்டில் உழைக்கும் பாட்டாளிகள் குறித்து, அந்த இழிசொல்லை இனி எவரும் பயன்படுத்த முடியாது. கூடாது.

பயன்படுத்தினால், இந்த மனோ கணேசன் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான இன்றைய மலையக இளையோர் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் பொங்கி எழுவார்கள். இது இந்த அதாவுல்லாவுக்கு மட்டுமல்ல, இவரை போன்ற அனைவருக்கும் நான் தரும் செய்தி என பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்றையதினம் தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் மனோகணேசன், அதாவுல்லா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்ட நேரடி நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்ச்சியின் போது மனோ கணேசனுக்கும் அதாவுல்லாவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் தோன்றின.

இந்த நிகழ்ச்சியின் போது தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொதுவெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்திய நிலையில், மனோ கணேசன் அதனை கண்டித்த போது மீண்டும், கருத்து முரண்பாடுகள் ஏற்பட அதாவுல்லா மீது மனோ கணேசன் மேசையில் இருந்த குவளை நீரை வீசி எறிந்தார்.

இதன்போது, அருகில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அதனை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்நிலையிலேயே மனோ கணேசன் குறித்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. WHY MANO AVARIN MASIRU MADDA PUNDA INTHA KATHAIGALA NEENGA KEDDU ILLA POLA AVAR MOSTLY IN DRUGS, ITHU AVARUKKU SINNA CASE NEENGA AVRUKKU SERUPPAALA ADITHU IRUKKANUM

    ReplyDelete
  2. He is one of the Muslim leader, not a normal person.
    He must apologise to whole SL Tamil community.



    ReplyDelete
  3. முதலில் கூட்டிக் கொடுத்து கூத்து பார்க்கும் அந்த நிகழ்ச்சியை தமிழ்,முஸ்லிம் அரசியல்,புத்திஜிவிகல் தவிர்த்து அங்கே கலந்து கொள்ளாமல் இருப்பது மிகச் சிறந்தது.

    ReplyDelete
  4. முன்னாள் அமைச்சர் அதாஉள்ளாஹ் அவர்களது சொற்பிரயோகம் தவிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் அரசியல் கன்றுக் குட்டியான மனோ,வெகுசன ஊடகங்கள், மேடைகள் மட்டுமல்லாது பாராளுமன்றத்திலும் முஸ்லிம்களின் இதயங்களைப் பல முறை கீறிக் கிழித்திருக்கின்றார் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. He must apologise and no one ever use those words.

    ReplyDelete
  6. As someone who was born and grew up on a Tea estate, myself have received such derogatory names in my childhood, I know the pain it causes to the estate people. I condemn this man for uttering such a word.

    ReplyDelete
  7. producers have to be unbiased, and they have to avoid uncultured individuals from participation... or at least to avoid telecasting such ugliest scenes...

    ReplyDelete
  8. Dear Mano what Athaullah did is very bad, he created bad name for Muslim community.

    He should control his mouth! if he cannot should not come to a public debate

    ReplyDelete
  9. prior Mr.Athaullah ask pardon from tamil community, lets tamils ask pardon from muslim for atrocities, massacre, murders and other henious acts unleashed on poor muslim communities in Sr Lanka.
    Will Mr. Manoganeshan or Mr.Sumanthiran are ready to beg for pardon from myslim community.
    The word Mr.Athaullah used is the normal word used to call estate workers. I ask Mr.Sumanthiran, how do you call them in Jaffna where your society is infested with cast race and religion to the core.

    Tell me did Mr.Prabakaran was accepted by Sri Lankan Tamils 100%.
    Go and see your face in mirror first.

    ReplyDelete
  10. mr.mano you are a big chandiyan.

    ReplyDelete
  11. மனோ போன்றோர் தாம் ஜனாதிபதித்தேர்தலில் அடைந்த படு தோல்வி மற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு எதுவும் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனமை போன்ற விஷயங்களை மறைக்க இது போன்ற விஷயங்களை கையிலெடுக்க முயல்கிறார்.

    ReplyDelete
  12. கக்காவுல்லா உமக்கு சபை ஒழுக்கம் தெறியாது பேச்சில் நிதானம் வேண்டும் உனக்கு எச்சில் தண்ணீா் பொருத்தமானது

    ReplyDelete
  13. thirumbavum solluran MANO podura dramatan idu...aduta election ku anda nai da master plan

    ReplyDelete

Powered by Blogger.