Header Ads



சிவாஜிலிங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நோய், இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என அறிவிப்பு

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தில்ல போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த மாவை, அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,  “2010ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுதும் போட்டியிடுகிறார். 

“போட்டியிடாவிட்டால் உயிரை விட்டு விடுவார். அதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு மருந்தில்லா விட்டாலும், பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள்தான். அவர் பெரியளவில் வாக்கெடுக்காவிட்டாலும், இன்று தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. போட்டி பலமானது.

“2015ஆம் ஆண்டு இருந்ததை விட மாறுப்பட்ட ஒரு சூழ்நிலையில் இன்று நாங்கள் அனைவரும் உள்ளோம். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்.

“இப்பொழுதும் ஒரு தரப்பினர் தேர்தலை பகிஷ்கரிப்போம் என்கிறார்கள். 2005ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமஷ்டி முறையில் அதிகாரத்தை தருவதாக கூறினார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதே போன்ற ஒரு நிலைமையே இப்பொழுதும் ஏற்பட்டுள்ளது.

“நாங்கள் சஜித்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் ராஜித, ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களுடன் சம்பந்தனும், சுமந்திரனும் பேசினார்கள். சஜித்தும் எதுவும் பேசவில்லை. ஆனால் பொருத்தமான நேரத்தில் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.” என்றார்.

1 comment:

  1. உங்களது டீல் சமூகத்தி்ற்கு.ஆனால் எங்கள் தலைவனுகளது டீல் அவனுகளது வங்கிக் கணக்கை நிரப்புவதற்கு.
    உங்க டீல் வடக்கு கிழக்கை முழுமையாக கைப்பற்றுவது
    எங்க டீல் பதவி பட்டம்.
    உங்களுக்கு தலைவர்கள் உண்டு.
    எங்களுக்கு தலைகள் உண்டு.
    பாவம் ஹரிஸ் mp.கல்முனை எங்க எண்டு கண்டியில் போய்த்தான் தேடவேண்டிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.